திருமணதிற்கு பிறகும் திரையில் மிரட்டும் நடிகைகள்..! 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த பல நடிகைகள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டு சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்துவிட்டார்கள்.

அப்படி ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்து வந்த பல பேர் மீண்டும் சினிமா துறைக்கு நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

3. மீரா ஜாஸ்மின்:

இந்த லிஸ்டில் மூன்றாவதாக இருக்கும் நபர் தான் மீரா ஜாஸ்மின். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகையான மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2000ம் ஆண்டில் வெளிவந்த ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆழுத எழுத்து ,கஸ்தூரிமான், சண்டக்கோழி ,மெர்குரி பூக்கள் ,திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்தார் .

இதனடியை நடிகை மீரா ஜாஸ்மின் அணில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் .

பின்ன சினிமா பக்கமே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அதன் பிறகு “மகள்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

2. நடிகை லைலா:

இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை லைலா. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை லைலா.

இவர் தமிழில் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார். 2000 கால கட்டத்தில் விஜயகாந்த் , அஜித், சூர்யா, விக்ரம் ,பிரசாந்த், சரத்குமார் இப்படி பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக இடம் பெற்றார்.

இவரது நடிப்பில் வெளிவந்த தில், தீனா ,மௌனம் பேசியதே, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது.

நடிகை லைலா குழந்தை போன்று சுபாவம் கொண்டு திரைப்படங்களில் நடித்ததால் ஏகோபித்த ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார் .

இதனிடையே மொய்தீன் என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

லைலாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார் நடிகை லைலா.

அதை அடுத்து பல வருடங்கள் கழித்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.

மேலும், தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் கோட் திரைப்படத்தில் லைலா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1. நடிகை சிம்ரன்:

அடுத்ததாக இந்த லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நட்சத்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் சிம்ரன்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவரான இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான சிம்ரன் தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி ,ஜோடி ,பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் பார்த்தேன் ரசித்தேன், பாஞ்ச தந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ ,வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகை சிம்ரன் தீபக் பக்கா என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணம் குழந்தைக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை சிம்ரன் பல வருடங்கள் கழித்து பேட்ட திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் அல்லாமால் இந்த மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படியான கதாபாத்திரம் அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்க தயார் என மூன்று பேருமே வெவ்வேறு பேட்டிகளில் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version