நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை சீதை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள்..!

இந்து சமய இதிகாசமான ராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருபவர் தான் சீதை. விஷ்ணுவின் அவதாரமான ராமனின் மனைவியாக இவரை ராமாயணம் சித்தரிக்கிறது.

எனவே இவர் லட்சுமியின் அவதாரமாக சீதையாக பார்க்கப்படுகிறார். இவர் மதிலை நாட்டு இளவரசி ஆதலால் மைதிலி எனவும் அழைக்கப்படுவதுண்டு.

சீதை:

ராமாயணத்தில் சீதை வயது வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகருக்கு சிவனால் வழங்கப்பட வில்லில் வெற்றியுடன் “நாண்” ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த சுயம்வரத்தில் ராமர் உட்பட பல ராஜகுமார்கள் கலந்து கொண்டார்கள். எவராலும் அசைக்க முடியாத வில்லை ராமர் “நாண்” ஏற்ற முற்படும்போது பெரும் ஓசியுடன் வில் முறிந்து விட்டது.

இதனால் ஸ்ரீ ராமனின் மனைவியாகினார் சீதை. இப்படித்தான் சீதை ராமனின் கதை இராமாயணத்தில் உருவாகியது.

இந்த நிலையில் சினிமாவில் சீதை கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் பாலிவுட் முதல் தென்னிந்திய சினிமா வரை நடித்த நடிகைகள் பற்றி இந்த லிஸ்டில் பார்க்கலாம்.

நடிகை சந்திரலேகா:

70 ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த நடிகை சந்திரலேகா தெலுங்கு சினிமாவில் வெளிவந்த சம்பூர்ண ராமாயணம் என்னும் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அப்போது அனைவராலும் கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை தீபிகா சிக்லியா:

அதேபோல் ஹிந்தியில் வெளிவந்த ராமானுஜாகர் என்ற தொலைக்காட்சி தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா சிக்கலயா. இவரது தோற்றமும் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது.

நடிகை தீபிகா சிக்கலயா:

2008 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் தொலைக்காட்சி தொடரான ராமாயணம் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை டெபினா போனர்ஜி. இதே தொடர் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாக இங்கும் தமிழ் மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த தொடரில் ராமனாக நடித்த குர்மீட் சௌத்ரியை நடிகை டெமினா காதலித்து திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா:

அதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ராமராஜ்யம் என்ற திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து அசத்தினார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பெரும் சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் அதில் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை மதிராக்ஸி முண்டல்:

அத்துடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை அதிகம் கவர்ந்தவர் தான் நடிகை மதிராக்ஸி முண்டல்.

நடிகை கீர்த்தி சனோன்:

சில மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இப்படத்தில் ராமன் சீதையாக பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்திருந்தார்கள்.

இது படத்தில் நடித்த பிறகு இவர்கள் உண்மையிலே காதலிக்க தொடங்கியதாக செய்திகள் வெளியாகியது இவர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது இதில் சீதையாக கிருத்தி சனோன் மிகச்சிறப்பாக நடித்திருந்ததாக பாலிவுட் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.

நடிகை சாய் பல்லவி:

நடிகை சாய் பல்லவி இராமாயணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தான். ஆனால், பிரபாஸ் இப்படத்திலிருந்து வெளியேறியதால் நயன்தாராவும் வெளியேறிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version