ஆரம்பத்தில் இது கஷ்டமா இருந்துச்சு.. ஆனா இப்போ ஜாலியா இருக்கு.. அதுல்யா ரவி என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

அழகு பெண்ணாக பவ்யமான ஹீரோயினாக பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு தோற்றத்தில் மிகவும் எளிமையான ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.

இதனால் இவர் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

நடிகை அதுல்யா ரவி:

கோயம்பத்தூரில் பிறந்து நல்ல அழகிய நடிகையாக குறும்படங்களின் முதன்முதலில் நடித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பை பெற்று இன்று கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறும் படங்களில் நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். குறும்படங்களை பார்த்து அவரது அழகில் மயங்கி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அதன் பிறகு சினிமாவில் மிகுந்த ஆர்வத்தை காட்ட துவங்கினார். அதில் முதன் முதலில் அவர் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெரும் புகழையும் அடையாளத்தையும் தேடி கொடுத்தது. பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என காத்திருக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் சிறு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் கூட நடிக்க ஆரம்பித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்

அதுல்யா ஆரம்பத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியான பெண்ணாக சுடிதார் அணிந்து அதற்கு துப்பட்டா போட்டு இழுத்து மூடி நடித்து வந்தார்.

வாய்ப்பிற்காக கவர்ச்சி:

பின்னர் நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தாறுமாறான கிளாமரை காட்ட ஆரம்பித்தார்.

2010 ஆம் ஆண்டில் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த அடுத்த சாட்டை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஒரு நல்ல பெயரை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க துவங்கினார்.

பின்னர் தமிழில் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற ஏடாகூடமான திரைப்படத்தில் நடித்து எல்லோரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

அந்த திரைப்படம் அவருக்கு மிக மோசமான அனுபவத்தை கொடுத்தது. விமர்சன ரீதியாக பெரும் சர்ச்சையில் சிக்கியது என்றே சொல்லலாம்.

ஏடாகூடமான படத்தில் அதுல்யா:

ஆனால் இருந்தும் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஒன்றும் வசூலை ஈட்டவில்லை. இதனால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடிக்கொண்டே கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைதளங்களை புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

மேலும், தனது முக அழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அவர் மாற்றி அமைத்துக் கொண்டதாக விமர்சனத்தில் சிக்கினார் .

ஆனால், அதற்கு அவர் மறுப்பையும் தெரிவித்திருந்தார். இதனிடையே எப்போதும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தொடர்ச்சியாக போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

இந்நிலையில் தான் திரைப்படத்தில் நடிக்க வந்த புதிதில் முதல் படம் வெளியாகாமல் பல நாட்கள் கிடப்பில் கிடந்ததை பற்றி வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

முதல் படத்தால் பட்ட வேதனை:

சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறி விட்டேன்.

ஆனால், அந்த படம் வெளியாவதற்கு பல்வேறு தடைகள் எழுதன, இந்த தேதியில் ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறுவார்கள் ஆனால் ரிலீஸ் ஆகாது. அந்த தேதியில் ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறுவார்கள் ஆனால் ரிலீஸ் ஆகாது .

நானும் என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் இன்று ரிலீசாகும் நாளை ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.

இதனால் நிஜமாகவே நீ படத்தில் நடித்திருக்கிறாயா? அல்லது சும்மா கதை ஓடிட்டு இருக்கியா? என்று என்னை கேட்பார்கள்.

அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருமுறை இரண்டு முறை அல்ல பலமுறை என்னுடைய முதல் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் அனைவரும் கிண்டலாக பேசுவார்கள். ஆனால் படம் வெளியாகி எனக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுத்த பிறகு இப்போ எல்லாமே ஜாலியாக இருக்கிறது என பேசியிருக்கிறார் அதுல்யா ரவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version