டாக்டர், நடிகை என்பதோடு நிற்காமல் விருமன் அதிதி பத்திரிகையாளரா? மாறி விட்டார்களா!

 

இந்தியன், ஜென்டில்மேன், ஏந்திரன் போன்ற படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று கூறுமளவுக்கு இவரது படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும். இவரின் படத்தின் பிரம்மாண்ட இயக்கத்தை காண்பதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது.

இவரின் இளைய மகளான அதிதி டாக்டர் பட்டம் பெற்றவர். மருத்துவம் படித்து இருந்தாலும் இவர் தனக்குள்ளும் இருந்த சினிமா தாக்கத்தால் நடிகர் கார்த்திக் உடன் விருமன் படத்தில் நடித்திருந்தார். அஞ்சாப்பூ கண்ணால பாடலில் இவர் நடித்த இருந்த விதம், இவரின் உடல் அசைவுகளில் எல்லோரும் அசந்து விட்டார்கள். அந்த அளவுக்கு நடித்து இவர் அந்த படத்தை வெளி வந்த பின் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போது உருவாக்கி விட்டார்.

 இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது அந்த படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

அதிலே நடிகர் சூரியுடன் இணைந்து மொக்கை ஜோக்குகளை கூறி அனைவரையும் கலகலப்பாக வைத்துக் கொள்வார் என்று எல்லோரும் அவரைப் பற்றி மிகவும் மெச்சும் விதமாக பேசுகிறார்கள்.

மண்டேலா  படத்தை உருவாக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின்  இந்த மாவீரன் படத்தையும் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய படத்தில் சமூகம் சார்ந்த செய்திகளை தெளிவாக மக்கள் முன் கொண்டு வந்து சேர்த்தது பெருமைக்குரிய விஷயமாகும். அதே போலவே இந்த படத்திலும் சமூக செய்திகள் மக்களுக்கு கொடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இதை உறுதி செய்யும் விதமாக இந்தப் படத்தில் அதிதி ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எனது மாவீரன் படத்தில் அதிதியின்  கதாபாத்திரம் பேசப்பட கூடியதாகவும் இருக்கும். இந்த கதாபாத்திரத்தை இவர் சீரும் சிறப்புமாக செய்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை வாங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தான் ஒரு மருத்துவர், மிகப்பெரிய இயக்குனர் மகள் என்ற கௌரவம் சிறிதளவும் இல்லாமல் இவர் அனைவரிடமும் பழகும் விதம்  அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த படத்தில் இவர் பத்திரிக்கையாளராக  வெற்றி பெற அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …