சித்தார்த் மனைவி அதிதி ராவ் ஹைதாரியின் முன்னாள் கணவரை பார்த்ததுண்டா..? ஏன் பிரிந்தார் தெரியுமா..?

ஆந்திராவை சேர்ந்த நடிகையான அதிதி ராவ் ஹைதாரி பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்த ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர் முதன்முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த வந்தார்.

நடிகை அதிதி ராவ் ஹைதாரி:

தமிழில் ஸ்ரீங்காரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த அதிதி ராவ் ஹைதா ரிகாற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிதி செக்கச் சிவந்த வானம்,சைக்கோ, ஹேசினாமிகா உள்ளிட்ட,

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த மகா சமுத்திரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சித்தாத்துடன் காதல் வயப்பட்ட அதிதி ராவ் தங்களது காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள்.

திருமணம் செய்யாமலே உறவு:

அவ்வப்போது இவர்கள் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தாலும் கூட தாங்கள் காதலிப்பதாக பொதுவெளியில் வெளிப்படையாக சொன்னதே கிடையாது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்க நாயக சுவாமி கோவிலில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் உறுதியளித்தனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இந்த தம்பதியை குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருக்கிறது.

அதிதியின் முதல் கணவர்:

அதிதி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அதேபோல் சித்தார்த்தம் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிதி ராவ் ஹைதாரி தன்னுடைய 21 வயதிலேயே சத்யதேவ் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களையே இவர்கள் விவாகரத்து செய்த பிரிந்து விட்டார்கள்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக பாலிவுட் செய்திகளில் அவ்வப்போது தகவல் வெளியாகியது. ஆனால் இதைப் பற்றி பேசவே அதிதி ராவ் மறுத்துவிட்டார்.

இருமனம் விரும்பி மறுமணம்:

இதே போன்றே நடிகர் சித்தார்த்துக்கும் மேக்னா என்ற பெண்ணுடன் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது பின்னர் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ துவங்கி பின்னர் 2007 ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இப்படியாக பழைய திருமண வாழ்க்கையை மறந்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் மறுமணம் செய்து கொள்ள இருப்பது மீடியா உலகில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version