இந்த கன்றாவிக்காக நான் மன்னிப்பு கேக்க போறது இல்ல.. Aditi Rao Hydari ஆவேசம்.. என்ன நடந்தது..?

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அரச குடும்பத்தை சார்ந்தவராக இருக்கிறார். இவர் பாடகராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிருங்காரம் எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தேவதாசி கேரக்டர் ரோலை செய்திருந்ததை அடுத்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள்.

அதிதி ராவ் ஹைதாரி..

எனினும் இவர் 2018 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி நடித்த செக்கச் சிவந்த வானம் எனும் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிகச்சிறந்த பெயரை பெற்றார்.

மேலும் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த காற்று வெளியிட எனும் தமிழ் படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்த அசத்தியிருக்கிறார். குறுகியளவு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களின் படை அதிகளவு உள்ளது என கூறலாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருப்பார். அப்படி இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோசையும் ரசிகர்கள் வைச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே ரசிப்பார்கள்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்..

இந்நிலையில் சமீபத்து பேட்டி ஒன்றில் கூட அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் மூன்று படங்கள் கைவிட்டுப் போனதாக அதிதி ராவ் பகீர் தகவலை கூறி இருக்கிறார். அத்தோடு வாரிசு நடிகைகளை விட மற்ற நடிகைகளுக்கு இந்த கொடுமை அதிகளவு நடப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் எதற்காகவெல்லாம் நான் மன்னிப்பு கேட்க போறது இல்லை என்று கூறி ஒரு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டார். இதனை அடுத்து அதிதி ராவின் ஆவேசத்திற்கு காரணம் என்ன நடந்தது என்ற ரீதியில் ரசிகர்கள் ஒரு ஒவ்வொருவரும் மண்டையை பிடித்துக் கொண்டார்கள்.

அந்த வகையில் இவர் கூறுகையில் சினிமாவில் குறிப்பிட்ட நடிகைகள் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்ற ஒரு மேம்போக்கான பார்வையை சமீப காலமாக உடைத்து வருகிறார்கள் இது பாராட்டுதலுக்கு உரியது.

மேலும் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களுடைய நடிப்பு பசியை போக்கிக் கொள்ள விதவிதமான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட தவம் கிடக்கிறார்கள். இதற்கு காரணம் அவர் நடிப்பு திறமையை நிரூபிக்க கூடிய வகையில் ஏதாவது ஒரு கதாபாத்திரமோ, கதையோ அமைந்து விடாதா? என ஏங்கிக் கொண்டிருக்கிறோம் என கூறியிருக்கிறார்.

மேலும் எங்களுடைய எண்ணம், எங்களுடைய சுவாசம், எங்களுடைய எதிர்பார்ப்பு எல்லாமே சினிமா தானே தவிர ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை தான் நடிக்க வேண்டும் இவருக்கு இந்த கதாபாத்திரம் செட்டாகாது என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் எப்படி இருக்கிறேனோ, அதை நான் விரும்புகிறேன். என்னுடைய அழகை நான் விரும்புகிறேன். மேலும் என்னுடைய தோற்றத்தை நான் விரும்புகிறேன்.

இதில் என்னுடைய தோற்றம் எப்படி இருக்கிறது நான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்க மாட்டேன் என்று சில இயக்குனர்கள் கன்றாவியான கருத்தை கூறுகிறார்கள். அந்த கன்றாவிக்காக நான் மன்னிப்பு கேட்கப் போவது கிடையாது.

என்னை விரும்புகிறேன் பின் நான் சினிமாவை முழுமையாக விரும்புகிறேன். எனக்கு நடிப்பு தெரியும் அது தான் என் வாழ்க்கை என்றும் எந்த கேரக்டரா இருந்தாலும் அதை நடிப்பதற்கு நடிகர் மற்றும் நடிகைகள் பிட் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதமாக ஆவேசமாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி பேசி இருப்பது பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடிகை அதிதி ராவ் பேசிய இந்த பேச்சானது பரவலாக இணையம் முழுவதும் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர் கருத்தில் உண்மை இருப்பதாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து இருப்பது அவருக்கு ஆதரவு அளிப்பது போல் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version