நடிகை ராஷ்மிகாவையே தூக்கி சாப்பிட்ட சங்கர் மகள் அதிதி சங்கர்…!!

பிரம்மாண்ட இயக்குனர் என்ற வரிசையில் சங்கர்  பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இவரது இளைய மகள் தான் அதிதி சங்கர் டாக்டருக்கு படித்தவர். எனினும் சினிமாவின் மேல் கொண்ட அதீத காதலால் இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்தப் படத்தில் கிராமப்புற பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை என்ற பெயரை பெற்று விட்டார். இதன் மூலம் இவருக்கு ரசிகைகள் பட்டாளம் அதிகமானது.

 இதனை அடுத்து இவர்  முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இருக்கும் சிவகார்த்திகேயனோடு இணைந்து தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் அதிதி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அதுபோலவே அதிதியின் தோழியான பிரபல நடிகையான இந்திரஜா சங்கர் அதிதியுடன் இணைந்து நடனமாடி இருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் இந்திரஜா சங்கர் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி… சாமி பாடலுக்கு அதிதி சங்கரோடு இணைந்து ஆடி இருக்கிறார்.

 தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கக்கூடிய இந்த வீடியோவை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் ராஷ்மிகாவையே எடுத்து முழுங்கிய அளவுக்கு இவர்களது நடிப்பு மற்றும் நடன திறன் உள்ளது என்று பேசி இருக்கிறார்கள்.

 அந்த அளவு கூடுதல் அளவோடு இவர்கள் தங்களது நடனத் திறனை இந்த வீடியோவில் மிக அழகாக வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்திரஜா ஆடியதால் நிலநடுக்கம் ஏதாவது ஏற்பட்டு இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும் என்று நக்கலாக கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு அதிக அளவு லைக்களை போட்டு இருப்பதால் இவர்கள்  இருவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …