பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளும் மற்றும் நடிகையுமான அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அதனுடைய அறிமுகத்தை கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
முன்னதாக விருமன் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டாலும் கூட பொதுவெளியில் இவர் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இப்படி குழந்தை தனமாக நடந்து கொள்ளும் பொழுது திரையில் ஹீரோயினாக இவரை பார்ப்பது கடினமான விஷயமாக மாறிவிடும்.
இது இவருடைய இயல்பு என்று வைத்துக் கொண்டாலும் கூட தொடர்ந்து இப்படி செய்து கொண்டிருந்தால் இவருடைய சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பல்வேறு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் மஞ்சள் நிற புடவை சகிதமாக அதிதி சங்கர் சொக்க வைக்கும் கண் பார்வையை வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் வா செல்லம் வா செல்லம் இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று அவருடைய அழகை அள்ளிக் கொஞ்சி வருகின்றனர். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்றால் இப்படியான குழந்தைத்தனமான நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டால் தான் முடியும் என்பதை அதிதி சங்கர் உணர்ந்திருக்கிறார் என்று நம்பலாம்.
இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் சினிமாவில் இவருக்கு எளிமையாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றாலும் கூட தன்னுடைய தனி திறமையின் மூலம் மட்டுமே சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முடியும் என்பது தான் உண்மை.
இந்த வகையில், இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.