“அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ரெண்டு பேரோட..” கருணாஸ் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகையும் தமிழ் நடிகையும் ஆன பாவனா இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார்.

அந்த விஷயம் ஒட்டுமொத்த திரையுலகையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மட்டும் இல்லாமல் அந்த வழக்கை விசாரித்த போது அந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகரான திலீப் இருந்துள்ளது தெரிய வந்தது.

பாவனாவுக்கு நடந்த கொடுமை:

இதனால் ஒட்டுமொத்த நடிகைகளும் திரைத்துறையை சேர்ந்த பெண் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்து தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்தும் சினிமா துறையில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் விசாரிக்க தனியாக விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள் .

இதை எடுத்து ஹேமா கமிஷன் அந்த பொறுப்பை தலைமை ஏற்றது. பின்னர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹேமா கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் பல நடிகர்கள் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்தும் மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பிரச்சனை குறித்தும் 233 பக்கங்கள் அடங்கிய அறிக்கையாக அதை வெளியிட்டிருந்தனர்.

இதில் பல விஷயம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண் பிரபலங்களின் பிடியில் தான் மலையாள சினிமா இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதெல்லாம் கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்து போய்விட்டது.

இது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் கருணாஸ். அவர்களிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்கள்.

ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தென்னிந்திய சினிமாவில் இதுபோன்று நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து நீங்கள் என்ன ஆக்ஷன் எடுப்பீர்கள்?

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு உங்களது கருத்து என்ன? என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

“அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ரெண்டு பேரோட விருப்பம்”

அதற்கு கருணாஸ் கூறிய பதில்தான் ஒட்டுமொத்த திரையுலகங்களையும் அதிர வைத்திருக்கிறது.

அதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவுல மட்டும்தான் இருக்கு என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

இந்த சமூகத்தில் வேறு எங்குமே இந்த பிரச்சனை இல்லையா? அது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் யாருடைய விருப்பமும் இல்லாமல் இது எங்கும் நடப்பதில்லை.

நான் வெளியூரில் இருந்ததால் எனக்கு ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி எதுவும் தெரியவில்லை.

அதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு வரக்கூடிய காலங்களில் பதில் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு நகர்ந்தார்

நடிகர் சங்க துணை தலைவராக இருக்கும் கருணாஸின் இந்த பதில் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மிகப்பெரிய பிரச்சனையாக தலை விரித்தாடி கொண்டிருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு கருணாஸ் இதுபோன்ற பதில் அளித்தது எல்லோரையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

** இது குறித்து இணைய பக்கத்தில் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதில் பலரும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இரண்டு பேரோட தனிப்பட்ட விஷயம் என்று கருத முடியாது. அந்த அட்ஜஸ்ட்மென்ட் எதற்காக நடக்கிறது…?

என்பதுதான் இங்கே விஷயம். ஒரு திரைப்படத்தில் தன்னை முன்னிறுத்த வேண்டும். தன்னுடைய கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்ட வேண்டும் அல்லது தன்னுடைய பட வாய்ப்புக்காக என பல்வேறு காரணங்களுக்காக நடிகைகள் தங்களை இழக்க தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், இப்படியான நடிகைகளால் திறமை, அழகு இருந்தும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள தயாராக இல்லாத ஒரே காரணத்தினால் மட்டுமே எத்தனையோ பெண்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள்.

திறமையான நடிகைகள் அடையாளமின்றி போகிறார்கள்:

அவருடைய திறமை வீணாக்கப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள்.

இப்படி திறமையான நடிகைகள் வீட்டுக்குள்ளேயே முடக்கி போடுவது இந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளக்கூடிய நடிகைகள் தான்.

இது ஒரு சமூகப் பிரச்சனை. எந்த திறமையுமே இல்லாமல் வெறும் அழகையும் அட்ஜஸ்ட்மெண்டையும் வைத்துக்கொண்டு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகைகள் ஒட்டுமொத்த திரையுலகுக்குமே எதிரானவர்கள்.

திறமைக்கு எதிரானவர்கள். அப்படி இருக்கும் பொழுது இது இரண்டு பேரின் தனிப்பட்ட விஷயம் என்று கருணாஸ் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவர் பேசுவதை ஏற்றுக் கொண்டால் திறமை இருப்பவர்களை திறமையிருந்தும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள மறுத்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொண்டு அல்லது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் பெண்களின் கண்ணியத்தை அசிங்கப்படுத்துவது போல ஆகிவிடும் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam