ரூம் கூட போட்டாச்சு.. வேஸ்ட் ஆகிடும்.. 5 நிமிஷ காட்சிக்கு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்.. கெஞ்சிய இயக்குனர்..

சினிமா துறையை பொறுத்தவரை பெண்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை என்பது காலம் காலமாக நடந்து தான் வருகிறது.

திரைப்படத்திலோ சீரியலிலோ அல்லது ஒரே ஒரு பாடல் காட்சியிலோ நடித்து பிரபலமாக வேண்டும் என்று கனவோடும் ஆசையோடும் திரைப்படத்துறைக்கு வரும் நடிகைகள் முதலில் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை சந்தித்த பிறகுதான் சினிமாவில் நடிகையாகவே வர முடியும் .

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்:

உச்ச நட்சத்திர நடிகைகளாக இருக்கும் பல பேர் முன்னொரு காலத்தில் பல இயக்குனர்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் கேமராமேன் என்று இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இன்று உச்ச இடத்தை தொட்டு இருக்கிறார்கள்.

ஓரளவுக்கு நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தாங்கிக்கொண்டு பின்னர் முன்னணி நடிகையாக வந்துவிட்டால் அதன் பின் அவர்களை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது.

அட்ஜெட்மென்ட் செய்துதான் ஆகவேண்டும் இல்லையென்றால் வாய்ப்பு இல்லை என இப்போது சினிமாவில் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது .

இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் நடிகைகளிடம் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ கேட்கப்படுகிறது .

குறிப்பாக ஆடிஷன் எடுக்கும் போது எடுத்த உடனே அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு ஆப்ஷன் வந்து விடுகிறது.

நீங்கள் அடுத்தது அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ரெடியாக இருந்தால் அடுத்த வேலை பார்க்கலாம் என வெளிப்படையாகவே இயக்குனர்கள் தெரிவிக்கிறார்கள் .

வெறும் 5 நிமிஷம் தான்…ரூம் கூட போட்டாச்சு:

இவ்வாறு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளை குறித்து பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ,வரலட்சுமி மற்றும் சீரியல் நடிகைகள் தேவி பிரியா உள்ளிட்ட பல பேர் இந்த பிரச்சனை தாங்கள் அனுபவித்து இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.

அப்படித்தான் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரபல துணை நடிகை ஒருவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லையும் பிரச்சனையும் குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறியதாவது… நான் ஒரு படத்தில் சமீபத்தில் நடித்தேன். அதில் என்னுடைய கேரக்டர் வெறும் அஞ்சு நிமிஷம் காட்சி தான் 5 நிமிடம் தான் வந்து போகும்.

அந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. பிறகு இயக்குனர் என்னை அழைத்து தயாரிப்பாளர் ரூம் எல்லாம் போட்டு விட்டார். வேஸ்ட் ஆகிவிடும் எனச் சொல்லி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார் .

அவர் அப்படி சொல்லியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . உடனே அவரை பயங்கரமாக திட்டிவிட்டேன். வெறும் அஞ்சு நிமிட ரோலுக்கு கூட என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்.

ஒருநாள் ஷூட்டிங்கிற்கு மூன்று நாட்கள் ரூமில் தங்க வைத்தார்கள். அப்போது அங்கு மேனேஜராக இருந்தவர் என்னை அடிக்கடி வந்து சந்தித்தார்.

கெஞ்சிய இயக்குனர்:

அந்த சமயத்தில் மேலே விழுவது முத்தம் கொடுப்பது இப்படி எல்லை மீறி மிகவும் மோசமாக கீழ்த்தரமாக நடந்து கொண்டார்.

அப்போது வேறு வழி இல்லாமல் அதை பல்லு கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டேன். சூட்டிங் முடிந்த பிறகு அந்த மேனேஜரை பயங்கரமாக திட்டி விட்டு வந்தேன் என துணை நடிகை கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version