தற்போது அதிமாக புழக்கத்தில் இருக்கும் அஜினோமோட்டோ உண்மையிலேயே ஆபத்தனாதா..? உண்மை நிலவரம் என்ன..?

தற்போது சமையல் அறைகளில் இடம் பிடித்திருக்கும் இந்த அஜினோமோட்டோவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் அஜினோமோட்டோ என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அஜினோமோட்டோ என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதிப்பெயர் மோனோ சோடியம் குளுட்டமேட்  என்பதாகும்.

 உணவுகளின் கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படக்கூடிய இந்த அட்வினோமோட்டோ சீன உணவுகளில் அடிகளவு பயன்பாட்டில் இருக்கிறது.

தற்போது இந்திய சமையலறையில் எட்டிப் பார்த்திருக்கும் இந்த அஜினோமோட்டோவால் எண்ணற்ற தீமைகள் உருவாகிறது என்று காரசாரமான விவாதங்கள் சென்று கொண்டுள்ள வேளையில் இது குளுட்டமிக் அமிலத்தில்  இருந்து தயாரிக்கப்படுகிறது.

மேலும் தாவரங்களில் சக்கரை வள்ளி கிழங்கு, கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது.

அஜினோமோட்டோவில் உள்ள சத்துக்கள்

12,300 மில்லி கிராம் சோடியம்

21.2 மில்லி கிராம் கால்சியம்

0.4 மில்லி கிராம் இரும்புச்சத்து

மேற்குரிய சத்துக்களை கொண்டிருக்க கூடிய அஜினோமோட்டோவில் வைட்டமின்கள் புரதங்கள் கொழுப்புகள் இல்லை.

அஜினோமோட்டோ நன்மை தருகிறதா? அல்லது தீமை தருகிறதா?

 நீங்கள் உங்கள் உணவில் குறைந்த அளவு அஜினோமோட்டோவை சேர்த்துக் கொள்வதால் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.

 அதுவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற கூடிய அளவு தினமும் அதிகளவு இந்த அஜினோமோட்டோவை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் மூளை நரம்பு பாதிக்கப்படும். இதற்கு காரணம் குளுட்டாமிக் அமிலம்.

இது மூளைக்குச் செல்லக்கூடிய நரம்பு  செல்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டு உள்ளது. எனினும் இது உண்மையா? என்பதை எந்த ஒரு ஆய்வும் நிரூபிக்கவில்லை.

 நீங்கள் அதிகமாக அஜினமோட்டோவை எடுத்துக் கொள்ளும் போது உடலில் வியர்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு உடலில் நீர் இழப்பை இது ஏற்படுத்துவதின் மூலம் உடல் சோர்வடைகிறது.

 மேலும் இந்த அஜினோமோட்டோவில் சோடியம் அதிகளவு இருப்பதால் முட்டுப் பகுதிகள் மற்றும் தசைகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதோடு வயிற்று எரிச்சலையும் உண்டு பண்ணுகிறது.

 செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திகின்ற தன்மை இந்த அதினோமோட்டோவுக்கு உள்ளது. மேலும் அமிலத்தன்மையை இது குடலில் அதிகப்படுத்தி விடும்.

 இன்னும் சில பேருக்கு அஜினோமோட்டோ உண்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் ஒற்றைத் தலைவலியும் ஏற்படுவதாக சிலர் கூறுகிறார்கள். அஜினமோட்டோவில் இருக்கக்கூடிய மோனோசோடியம் குளுட்டமேட் ஆனது உறங்கும் போது சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுகிறது.

 எனவே குறட்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அதிகளவு பெருகுவதற்கான வாய்ப்பினை இது ஏற்படுத்துகிறது. எனவே புற்று நோய்க்கு வழி வைக்கக்கூடிய சக்தி இந்த அஜினோமோட்டோவுக்கு உள்ளது.

எனவே பொதுவாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எந்த அஜினோமோட்டோவை பயன்படுத்த வேண்டாம். எனினும் நீங்கள் 0.5 கிராம் அளவு அஜினோமோட்டோ சேர்ப்பது உங்களுக்கு பாதுகாப்பானது என்று உணவியல் ஊட்டச்சத்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 மேற்கூறிய கருத்துக்களை நீங்களே ஆய்வு செய்து அதினமோட்டோவால் ஏற்படும் நன்மை தீமைகளை புரிந்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதும் தவிர்ப்பதும் உங்கள் கையில் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …