கூறையை பிச்சுகிட்டு கொட்டுறதுனா இது தானா..? உச்ச கட்ட மகிழ்ச்சியில் நடிகை சினேகா..!

ஹோம்லியான நடிகையாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக 2000 காலகட்டத்தில் வலம் வந்தவர் தான் நடிகை சினேகா .

இவர் தமிழை தாண்டி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை சினேகா:

படங்களில் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தும் பவ்யமான கதாநாயகியாக எல்லோரது மனதிலும் இடத்தை பிடித்தவர் நடிகை சினேகா .

இன்று வரை நடிகை சினேகாவுக்கு தனி இடமே தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அது அவரது நடிப்பும் அவருக்காக கொடுக்கப்பட்ட அந்த கேரக்டர்களும் தான் .

இப்போதும் அவர் தனது கேரக்டர்கள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சினேகா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் புன்னகை அரசி என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

தமிழ் சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டையும் அந்தஸ்தையும் கொடுத்து உச்சத்தில் உட்கார வைத்தது .

கொடிகட்டி பறந்த சினேகா:

2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சினேகா .

இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம்,விரும்புகிறேன், பம்மல் கே சம்பந்தம் , வசீகரா ,ஆட்டோகிராப், ஜனா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும், பிரிவோம் சந்திப்போம், பள்ளிக்கூடம், நான் அவன் இல்லை, புதுப்பேட்டை, கோவை இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக படு பிஸியான வலம் வந்து கொண்டு இருந்தார்.

நல்ல அழகான தோற்றத்தை கொண்டு நேர்த்தியான உடைகளை அணிந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மனம் கவரும் நடிகையான சினேகா திரைப்படங்களை தாண்டி பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்த பிரபலமாக இருந்தார்.

பிரசன்னாவுடன் காதல்:

குறிப்பாக இவர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ் ஆசிர்வாட் உள்ளிட்ட பல விளம்பரங்களிலும் நடித்து இவர் மக்களின் மனதை கவர்ந்தவராக பார்க்கப்படுகிறார் .

இதனிடையே பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள் .

திருமணம் குழந்தைகளுக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்த நடிகை சினேகா மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் பிஸியான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் நடிகை சினேகா. அந்த வகையில் தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

20 வருஷத்துக்கு பின் விஜய்யுடன்:

இது குறித்த தகவல் படபிடிப்பின் பூஜையின் போது வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மும்முரமாக தயாராகி வரும் இப்படத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மேலும், கோட் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றியும் அப்பிடத்தின் லேட்டஸ்ட்டான அப்டேட் பற்றியும் கூறி விஜய் ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழத்தி இருக்கிறார் நடிகை சினேகா.

மேலும் சினேகா கோட் படம் குறித்து கூறியதாவது ” நான் விஜய்யுடன் 20 வருடத்திற்கு முன்பு வசீகரா திரைப்படத்தில் நடித்தேன் .

அந்த திரைப்படம் எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நல்ல கெமிஸ்ட்ரி சிறப்பாக எடுத்துக் காட்டியது. இந்த படமும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்ஷனை பெற்றுள்ளது .

அதை எடுத்து தற்போது 20 வருடங்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் கோட் படத்தில் நடிக்கிறேன். பல படங்களில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தொடர்ச்சியாக மிஸ் ஆகி வந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கச்சிதமாக அமைந்துவிட்டது .

இப்படத்தில் நான் வயதான விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட என்னுடைய எல்லா போஷனும் முடித்து விட்டேன்.

GOAT படத்தின் சூப்பரான அப்டேட் கொடுத்த சினேகா:

இன்னும் ஒருநாள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கு… ரொம்பவே ஹாப்பியா இருக்கு… கோட் படம் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

என்னுடைய காட்சி அப்பா விஜய்யுடன் மட்டுமில்லாமல் மகன் விஜய்யுடனும் இருக்கும் . எனவே நான் படம் முழுக்க வந்து செல்வேன் .

இந்த படத்திற்காக நான் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறேன் என சினேகா அந்த பேட்டியில் கூற விஜய் ரசிகர்கள் செம குஷி ஆகிவிட்டனர். இந்த லேட்டஸ்ட் அப்டேட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version