தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவின் புதிய பார்ட்னர் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் மிகவும் போராடி பெரும் இடத்தை தொட்ட ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன.

ஆரம்பத்தில் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வந்த நடிகர் தனுஷ் போக போக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவருடைய தனிப்பட்ட நடிப்பிற்கு ஓரளவு வரவேற்பு என்பது கிடைக்க தொடங்கியது.

அவர் நடித்த அசுரன், கர்ணன் மாதிரியான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருப்பதை பார்க்க முடியும். அதேபோல பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில் நானே வருவேன் என்கிற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ்.

தனுஷ் கல்யாணம்:

சினிமாவில் வந்து சில காலங்களிலேயே தனுஷிற்க்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கும் இடையே திருமணமானது. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

ஒரு சில திரைப்படங்களை அவர் இயக்கியும் இருக்கிறார். சமீபத்தில் கூட லால் சலாம் திரைப்படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தனுஷிற்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து நிறைய விஷயங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபாடு செலுத்தி வருகின்றார். திருமணத்தை தாண்டியும் ஒரு பெண்ணால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என மக்களுக்கு காட்டுவதற்காக திரைப்படங்கள் இயக்குவதில் இன்னும் மும்முரமாக இறங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

உடற்பயிற்சியில் கவனம்:

இந்த நிலையில் அவரது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். மேலும் திருமண பந்தத்தில் இருந்ததை விட இப்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகமான திரைப்படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லால் சலாம் திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. எனவே கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அதிக வைரலாகி வந்தது.

இந்த நிலையில் அவரது பிட்னஸ் பார்ட்னர் யார் என்கிற விஷயத்தை வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான ஜோசப் சின்னப்பாதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு உடற்பயிற்சிகளுக்கு கோச்சாக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து கண்டிப்பாக அவரது பிட்னஸில் ஒரு முன்னேற்றம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version