குளித்து முடித்து விட்டு அடுத்த 5 நிமிடத்தில் சாப்பிடுவது நல்லதா

இன்று உள்ள காலகட்டத்தில் அனைவரும் உணவருந்திய பின் உடனே குளித்து விடுகிறார்கள் அவ்வாறு குடிப்பதினால் உடலுக்கு தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதற்கு காரணமாக சாதாரணமாக நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் அவ்வப்போது தவறுதலாக பண்ணி விடுவோம். அதற்கு நேரமின்மை, பதற்றம், உடல் ஆரோக்கியம் குறித்த கவலை இல்லாமை என காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

பொதுவாக வேலைக்கு செல்லும் நபர் முதல் வீட்டில் இருக்கும் நபர்கள் வரை அனைவருமே என்ன செய்வார்கள் என்றால் குளித்து முடித்தவுடன் உணவை எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக உண்ட உடனே குளித்து விடுவார்கள்.

இப்படி உணவு உண்பதற்கு முன்பாகவும் உண்பதற்கு பின்பாகவும் உடனடியாக குளிக்க கூடாது என்பது குறிப்பிடதக்கது. அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இவ்வாறு செய்தால் ஜீரண மண்டலம் சரிவர வேலை செய்யாமல் ஜீரண கோளாறு உண்டாகும் . 

உடல் உறுப்புகள் சரிவர இயங்காத நிலை ஏற்படும். இதற்கு காரணம் நமது உடல் வெப்பம் சராசரியாக 37 டிகிரி செல்சியஸ். மேலும் காலநிலை மாற்றம், தட்பவெப்பநிலை மாற்றம் என எதுவாக இருந்தாலும் எந்த ஒரு தருணத்திலும் சாதாரண உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் உடல் வெப்பநிலையை பேணிக் காக்கப்படும். 

இதனால் நாம் குளித்து விட்டு உடனடியாக சாப்பிடும்போது உடல் சற்று குளிர்ச்சி அடைந்து இருக்கும். இது போன்ற ஒரு தருணத்தில் ஜீரணம் சரியாக சம்பவிக்காது . 

ஆகையால் ஒருவர் குளித்துவிட்டு சாப்பிடும்போது குளித்தபின் குறைந்தது முக்கால் மணி நேரம் பிறகுதான் சாப்பிடவேண்டும். அதைபோல் உண்ட பின்பு இரண்டு மணி நேரம் பிறகு தான் தான் குளிக்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …