தமிழில் பிரபல நடிகையாக இருந்து எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற பிறகு சர்ச்சை காரணமாக சினிமாவில் இருந்து விலகியவர் நடிகை ரஞ்சிதா. பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு சாமியார்கள் மீது அதிக பக்தி இருப்பது என்பது தொடர்ந்து இருந்து வருகிறது.
ஏதாவது ஒரு சாமியாரின் மீது பற்று கொண்டு அவர்களின் ஆன்மீக பாதையில் நடிகைகள் வலம் வருகிறார்கள். அப்படியாக நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவின் ஆன்மீக பாதையை பின்பற்றுகிறேன் என்று சென்று அவருடன் உறவில் இருந்ததால் அது சர்ச்சைக்கு உள்ளாகி பிறகு சினிமாவில் இருந்த விலகினார் ரஞ்சிதா.
ரஞ்சிதா அறிமுகம்:
1992 இல் வெளியான நாடோடி தென்றல் திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரஞ்சிதா. அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த இரண்டு வருடங்களிலேயே அதிகமான திரைப்படங்களில் நடித்தார் ரஞ்சிதா.
1994 இல்தான் அவர் நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் வெளியானது ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் அவருக்கு கவர்ச்சியாகவே இரண்டு பாடல்கள் இருந்தன. அது அவருக்கு இன்னமும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து அப்பொழுது தமிழில் பெரிய நடிகர்களாக இருந்த கார்த்தி விஜயகாந்த் மாதிரியான நிறைய நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் நடிகை ரஞ்சிதா. 1996 வரையிலும் அவருக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதற்கு பிறகு வரவேற்பு என்பது ரஞ்சிதாவிற்கு குறைந்து விட்டது வருடத்திற்கு ஒரு படத்தில் நடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலை இருந்தது.
ஆன்மீக பாதை:
இந்த நிலையில்தான் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறினார் ரஞ்சிதா. அப்பொழுது நித்யானந்தாவின் படுக்கையறையில் ரகசியமாக கேமராவை வைத்து படம் பிடித்த காட்சிகளில் ரஞ்சிதா பதிவானதன் காரணமாக அவரது பெயர் தமிழ்நாட்டில் மிகவும் கெட்டுப்போனது.
தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி ஆன்மீக பாதையிலேயே சென்று வந்தார் ரஞ்சிதா. இப்பொழுது ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. நித்தியானந்தா இந்த சர்ச்சைகளுக்கு பிறகு கைலாசா என்கிற நாட்டை வாங்கி அங்கு குடியேறிவிட்டார்.
அந்த நாட்டில்தான் இப்பொழுது ரஞ்சிதாவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த நாட்டுக்கு பிரதமர் என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அந்த பிரதமராக ரஞ்சிதாதான் இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
நித்யானந்தாவை மீறி ரஞ்சிதா அந்த பதவியை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கைலாசாவில் சலசலப்பு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது .ரஞ்சிதாவிற்கு ஆதரவாக ஒரு குழுவும் நித்தியானந்தாவிற்கு ஆதரவாக ஒரு குழுவும் என கைலாசில் இருக்கும் பக்தர்கள் இரண்டு குழுவாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே நித்தியானந்தா உடல்நல குறைபாடு காரணமாக படுக்கையாக இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நேரம் பார்த்து இப்படியான அரசியல் பிரச்சினை அங்கு நடந்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.