அப்பா கூட தப்பா சேத்து வச்சி.. சுயநலத்துக்காக அந்த நடிகை செய்த வேலை.. ஐஸ்வர்யா கூறிய பகீர் தகவல்..

திரை உலகில் அன்று முதல் இன்று வரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் இருந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த நடிகையான நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். எனினும் தனது அம்மாவின் நடிப்பை போல இவரது நடிப்பு இல்லை என்று என்றும் இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா..

நடிகை ஐஸ்வர்யா நடிப்பில் வெளி வந்த ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜா என்ற கதாபாத்திரத்தை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: பீரியட்ஸ் வலி.. கல்யாணத்துக்கு முன்னாடி கொடைக்கானலில் சித்து செய்த செயல்.. ஸ்ரேயா எமோஷனல்..

மேலும் இவர் ராசுகுட்டி திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜோடு சேர்ந்து நடித்து மிக சூப்பராக ரீச் ஆனார். இந்த படத்தில் பணக்கார வீட்டில் வளர்ந்து வரும் திமிர் பிடித்த பெண் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என கூறலாம்.

90-களில் பிரபலமாக திகழ்ந்த நடிகை ஐஸ்வர்யா ஒரு நீண்ட இடைவெளி திரைத்துறையில் எடுத்துக்கொண்டு அபியும் நானும் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அப்பா கூடவே தப்பா சேர்த்து வச்சு..

இந்த சூழ்நிலையில் இவர் தற்போது திரை துறையை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் மற்ற நடிகைகளை போல அதிக அளவு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவதில்லை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு இவர் பேஸ்புக் மட்டும் தான் பயன்படுத்துவேன் என்ற கருத்தை கூறியதோடு ஒரு சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனின் கணவர் யார் தெரியுமா? என்று ஒரு செய்தி வந்திருந்தது என்பதை தெரிவித்தார்.

இதனை அடுத்து யாருடா என் கணவர் என்று பார்க்க ஆவலாக இருந்த நான் உள்ளே சென்று கிளிக் பண்ணி பார்த்தேன். அதில் என்னுடைய அம்மா லட்சுமியின் கணவர் அதாவது இரண்டாவது கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் தவறாக என்னுடைய கணவர் என்று போட்டு வெளியிட்டு இருந்தார்கள்.

எமோஷனல் பேச்சு..

இதைப் பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. எவ்வளவு கேவலமான செயல் இது. இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய கணவரை பல வருடங்களுக்கு முன்பே நான் விவாகரத்து செய்த நிலையில் இவ்வாறெல்லாம் தவறாக செய்திகள் பரவுவதை பார்க்கும் போது இணையத்தை பயன்படுத்த பயமாக உள்ளது.

இதையும் படிங்க: பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

எனவே குடும்பப் புகைப்படங்களை இணையத்தில் போஸ்ட் செய்ய நான் விரும்புவதில்லை. அப்படித் தான் போஸ்டை போட்டு அன்பை காட்ட வேண்டும் என்ற அவசியம் எங்கள் குடும்பத்தாருக்கும் இல்லை.

இன்றும் நான் என் அம்மாவோடு நல்ல உறவில் தான் இருக்கிறேன். அது எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என படு எமோஷனலாக பேசி இருந்தார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நடிகை ஐஸ்வர்யா கூறியதில் அர்த்தம் உள்ளது. அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரை அவரது கணவராக பதிவிட்டு இருப்பது மிகப்பெரிய தவறு இந்த தவறை அந்த ஊடகங்கள் அவர்களது சுயநலத்திற்காக செய்கிறார்கள் என்று சொன்ன விஷயம் உண்மை தான் என ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அப்பா கூட தப்பா சேர்த்து வைத்து சுயநலத்திற்காக ஊடகங்கள் செய்த செயலை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஐஸ்வர்யாவின் பேட்டியை பார்த்து அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version