“ஆத்தா நான் சித்தி ஆகிட்டேன்..” பூரித்து போன ஐஸ்வர்யா தத்தா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஹோம்லி கேரக்டர் ரோலை அதிகமாக செய்து பின்னர் மாடல் தேவதையாக ரசிகர்களின் மூலம் மனம் கவர்ந்து இழுக்கப்பட்ட ஐஸ்வர்யா தாத்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் வாழ்த்துக்களை மழையாக கொட்டி இருக்கிறார்கள்.

 மேலும் இவர் தமிழ் திரையுலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்தார்.

இதனை எடுத்து தமிழில் சரியாக பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார்.

 இதன் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த இவர் எதிர்பார்த்து அளவு புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து டிவி ஷோக்களே தலை காட்ட ஆரம்பித்தார்.

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது தனது அக்கா சீமந்த போட்டோக்களை வெளியிட்டு விரைவில் தான் சித்தி ஆகப்போகிற சந்தோஷ செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

 இப்போது இணையத்தில் வைரலாக பரவி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இணையத்தில் தற்போது அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.

 பொதுவாகவே எல்லா நடிகர்களும் நடிகைகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய வேளையில் தனது சகோதரியின் சீமந்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களோடு தங்கள் குடும்ப நிகழ்வை கொண்டாடிய ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமாண்டுகளை ரசிகர்கள் போட்டிருக்கிறார்கள்.

 மேலும் விரைவில் குட்டி இளவரசன் வந்தால் அந்த போட்டோவையும் எங்களுக்கு பகிருங்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் சில ரசிகர்கள் சுகப்பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை இப்போதிலிருந்து பிரார்த்திக்க போவதாக கூறி இருப்பது தான்  எல்லாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version