தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. அதுவும் இந்த விஷயத்துல.. பாடகி சுசித்ரா கூறிய அதிர வைக்கும் தகவல்கள்..!

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி அதன் பிறகு பாடகியாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் தான் பாடகி சுசித்ரா.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

ஆனால், பிரபலமானது என்னவோ ஆர் ஜே வாகத்தான். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி வானொலியில் பணியாற்றிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டார்.

பாடகி சுசித்ரா:

இடையே அவ்வப்போது திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்க திரைப்படங்களுக்கு பாடல்களை பாடி அசத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் முன்னணி பாடகியாக இவர் பேசப்படும் அளவுக்கு வளர்ந்து நின்றார். இதனிடையே தனுஷ் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கபோடு போட்ட யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நெருங்கிய நண்பராக அந்த படத்தில் நடித்த கார்த்திக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திக் குமார் பல்வேறு திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தது குறிப்பிடுத்தக்கது.

சுசித்ராவின் சமூகவலை பக்கத்தில் இருந்து நடிகர் நடிகைகளின் அந்தரங்க சமாச்சாரங்கள் லீலைகள் வீடியோக்கள் .புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகத்தியே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுச்சி லீக்சில் சிக்கிய நட்சத்திர பிரபலங்கள்:

நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் அப்பட்டமாக வெளியானதால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே சுசித்ராவின் கணக்கை பாய்ந்து சென்று பார்க்க துவங்கினர்.

இந்த சமாச்சாரத்தில் தனுஷ் ,அனுயா , நயன்தாரா , ஹன்சிகா, அனிருத் , சஞ்சிதா செட்டி, திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் போட்டு வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இந்த விவகாரத்தால் கார்த்திக் மற்றும் சுசித்ராவுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இந்த விவகாரத்தை அடுத்து சுசித்ரா மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலமாக பார்க்கப்பட்டதை அடுத்து சுசித்ரா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகவே ஒரு கட்டத்தில் மாறிவிட்டார்.

அதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் செய்து வந்தனர். நயன்தாரா சிம்புவின் லிப்லாக் காட்சி முதல் அனிருத் மற்றும் ஆன்ட்ரியாவின் கட்டி அணைத்த புகைப்படங்கள் வரைக்கும் டிடி வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வரைக்கும் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை போட்டு உடைத்து வெளிச்சம் ஆக்கினார் சுசித்ரா.

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்:

இந்த பிரச்சனை சற்று ஓய்ந்தது நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் சுசித்ரா தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விஷயத்தை குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, தனுசை காட்டிலும் ஐஸ்வர்யா தான் தனுஷை அதிகமாக ஏமாற்றி கேம் விளையாடினார்.

எனவே தனுஷை விட அவர் அந்த விஷயத்தில் மிகவும் மோசமானவர் எனக்கூறி இருக்கிறார் சுசித்ரா.

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் எனது முன்னால் கணவரான கார்த்திக் இருவரும் அறைக்குள் தனியாக படுத்திருக்கும் போது என்னென்ன பண்ணாங்க தெரியுமா? என படுமோசமான குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்திருக்கிறார் சுசித்ரா.

என் கணவருடன் படுக்கையில் தனுஷ்:

இந்த விஷயத்தால் நான் மிகவும் கடும் கோபத்தில் இருந்தேன். தனுஷை பார்த்தால் அறைந்து விடுவேன் என்று கோபத்தோடு கூறி இருப்பதோடு தனுஷை விட அந்த விஷயத்தில் ஐஸ்வர்யா ரொம்ப மோசம் எனக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனால் தனுஷின் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள். உங்களை வெளியே விடாத அளவுக்கு அடக்கி ஒடுக்கி உட்கார வைத்தாலும் மாசத்துக்கு ஒரு முறை இப்படி வாய்விட்டு மாட்டிகிறீர்களே என பலரும் சுசித்ராவை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version