பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இந்த கதாபாத்திரத்தை தத்துரூபமாக மிக நேர்த்தியான முறையில் செய்து இருந்ததின் காரணமாக இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
மேலும் படத்தில் கார்த்தியோடு செல்லும் போதும் ஜெயம் ரவியோடு யானை மீது ஏறிவரும் போதும் இவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டது என்று கூறவேண்டும்.
அது காதல் சீனிலும் சரி சண்டைக் காட்சியிலும் சரி இவரது நடிப்பு மிக அருமை என்று அனைவரையும் கைதட்ட வைத்துள்ளது.
இதையடுத்து ஐஸ்வர்யா லட்சுமி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் நவீன் சந்திரா ,பாபிசிம்ஹா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
மேலும் இந்த தெலுங்கு படமானது தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிற 24-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
இந்த படத்தின் கதை அம்சத்தை பொருத்தவரை போலீஸ் கணவனின் கொடுமையிலிருந்து தப்பிக்க கைதி ஒருவருடன் இணைவால் ஏற்படும் சிக்கல் பற்றி விளக்கம் கதை அம்சம் கொண்டது. இதில் போலீஸ்காரரின் மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இதில் இவரின் கேரக்டர் பெயர் தான் அம்மு.
போலீஸ்காரர் கணவராக நவீன் சந்திராவும் கைதியாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ள இந்தப் படம் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் நடித்திருந்த அனுபவத்தை பற்றி ஐஸ்வர்யா லட்சுமி பகிரும் போது தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது எனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் ஆனாலும் அந்த கேரக்டரை தான் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கூறி ஊக்கப்படுத்தியதால் பெரும் முயற்சியில் நான் இந்த கேரக்டரை செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு நின்று விடாமல் பூங்குழலியாக என்னை பார்த்த நீங்கள் இந்த படத்தில் அமைவாக பார்க்கவேண்டாமா? உங்கள் ஆதரவுக்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.