விஜய்யுடன் தான் அங்க போகணும்.. ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவை போலவே இவருமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்து அந்த மாதிரியான திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தனிப்பட்ட நடிப்பிற்கு என்று ஒரு ரசிகப்பட்டாளம் இருக்கதான் செய்கிறது ஐஸ்வர்யா ராஜேஷை பொருத்தவரை அவர் சினிமாவிற்கு வர வேண்டும் என்பதே அவருக்கு ஒரு பெரிய போராட்டமாக தான் இருந்திருக்கிறது.

ஐஸ்வர்யா திரைத்துறை பயணம்:

பொதுவாக நடிகைகள் மாடலிங் துறையிலிருந்துதான் சினிமாவிற்கு வருவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மாடலிங் துறையில் எல்லாம் இல்லாமலே சினிமாவிற்கு வந்தவர். மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது.

ஆனால் அதற்கு செலவு செய்யும் அளவிற்கு பண வசதி இல்லை. இதனால் சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் எளிதாக வரவேற்பு பெறலாம் என்பதை அறிந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில்தான் முதலில் மாநாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அங்கு அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிறகு சினிமாவில் முயற்சிக்கவும் செய்தார். உடனே பெரும் இயக்குனர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் சின்ன இயக்குனர்கள் படங்களில் முயற்சி செய்து வந்தார்.

முதல் பட வாய்ப்பு:

அப்பொழுதுதான் இயக்குனர் பா ரஞ்சித் அவரது முதல் திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தை இயக்கினார். அதில் அவர் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு பிறகு தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாய்ப்பு கிடைத்தது.

பண்ணையாரும் பத்மினியும், ரம்மி மாதிரியான திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அதற்கு பிறகு நடித்த காக்கா முட்டை திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வரைக்கும் ஒரு மாடர்ன் கதாநாயகியாக நடித்தது கிடையாது.

இருந்தாலும் கூட இனிவரும் படங்களில் அவர் அப்படி நடிப்பார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பேசி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரிடம் அந்த பேட்டியில் நீங்கள் யாராவது ஒரு நடிகருடன் டின்னர் சாப்பிட ஆசைப்பட்டால் எந்த நடிகருடன் சாப்பிடுவீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் என்றால் கண்டிப்பாக தளபதி விஜய்யுடன் சேர்ந்துதான் சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version