அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

இப்போதும் ஒரு பெண் தன்னை மிக அழகானவராக நினைத்து கர்வமாக நடந்துக்கொண்டால், அவர்களை பார்த்து மற்றவர்கள் சொல்லும் கிண்டலாக வார்த்தை, ஆமா இவளுக்கு பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு என்பதுதான்.

ஐஸ்வர்யா ராய்

இதில் இருந்தே, உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் ஒருவர்தான் என்பதுதான் அதன் உண்மையான கருத்து. அவருக்கு பிறகு நிறைய பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இன்று வரை மக்கள் பார்வையில் உலக அழகி என்ற கௌரவம் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

கடந்த 1994ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வானவர் ஐஸ்வர்யா ராய். 30 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் உலக அழகியாக தான் ரசிகர்களின் கண்களுக்கு அவர் தெரிகிறார்.

ஜீன்ஸ் படத்தில்

தமிழில் முதலில் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியில் முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

எப்படியும் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினிகாந்த் பாபா, படையப்பா, சிவாஜி என பல படங்களுக்கு முயன்ற நிலையில், கடைசியில் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிப்பு, மிகவும் சிறப்பாகவே இருந்தது.

அபிஷேக் பச்சன்

கடந்த 2007ம் ஆண்டில் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் 2011ம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு இப்போது 12 வயதாகிறது.

அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நட்சத்திர தம்பதியின் ஒரே மகளான ஆராத்யா பச்சன் எங்கு சென்றாலும், அவர் மீது அதிக கவனமும் ஈர்ப்பும் வந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்: சுற்றி 300 பேர் இருக்கும் போது.. முதன் முறையாக அது கிழிந்தது.. அலறிக்கொண்டு ஓடினேன்.. ஷகீலா கூறிய பகீர் தகவல்..

ஆராத்யா பச்சன்

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி விடுவதும் வழக்கமாக தொடர்கிறது. குறிப்பாக தன் அம்மா கலந்துக்கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் மகள் ஆராத்யா பச்சனும் ஆர்வமாக கலந்துக்கொண்டு வருகிறார்.

கடந்த ஒருவாரமாக மும்பையில் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் உலக பணக்காரர்களும், தொழிலதிபர்களும், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து..? வதந்தி என்று நினைத்த ரசிகர்கள்… இடியை இறக்கிய நயன்தாரா..

அந்த வகையில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியினர், தனது மகள் ஆராத்யா பச்சனுடன் திருமண விழாவில் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அம்மாவை மிஞ்சிய அழகில்..

அப்போது ஐஸ்வர்யா ராய் மகள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என அவரது அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் இருக்கிறார். ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க.. என்று பலரும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version