தாய்மையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது … விவாகரத்துக்கு குறித்து அபிஷேக் பச்சன் பளீச்!

உலக அழகியும் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதை எடுத்து இவரை முதன் முதலில் திரைப்பட நடிகை ஆக்கிய பெருமை தமிழ் திரைப்பட இயக்குனரான மணிரத்னத்திற்கு தான் சேரும்.

நடிகை ஐஸ்வர்யா ராய்:

ஆம், முதன் முதலில் இவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்து நடிகையாக ஆக்கினதே இயக்குனர் மணிரத்தினம் தான்.

தன்னுடைய இயக்கத்தில் 1997 இல் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலமாக ஐஸ்வர்யா ராய் ஹீரோயின் ஆக்கினார் மணிரத்தினம்.

அதுதான் ஐஸ்வர்யா ராயின் முதல் தமிழ் திரைப்படமும் கூட. அதை அடுத்து தமிழில் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ஜோதா அக்பர், ராவணன், எந்திரன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் அவருக்கு மீண்டும் மாபெரும் வெற்றி மகுடத்தை சூட்டியது. தமிழ் திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து அங்கு நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அபிஷேக் பச்சன் உடன் காதல்:

இதனடியை குரு திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோவான அபிஷேக் பிரச்சனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய பொருட்செலவில் நடத்தப்பட்டது.

இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு அழகிய மகள் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும்
ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராய் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு உலக அழகியாக பட்டதைப் பெற்று பின்னர் சினிமா நடிகையாக நட்சத்திர அந்தஸ்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னதாக சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் உடன் காதலில் இருந்து வந்தது குறிப்பித்தக்கது.

சல்மான் கானின் காதல் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் ஐஸ்வர்யா ராய் அவரை விட்டுப் பிரிந்தார்.

தற்போது 50 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீப நாட்களாக அவரது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதற்கான காரணம் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனே எல்லா நிகழ்ச்சிகளும் தனிமையில் சென்று வருகிறார்.

விவாகரத்துக்கு அபிஷேக் விளக்கம்:

இந்நிலையில் தற்போது இந்த விவாகரத்து வதந்திகள் குறித்து முதன் முதலாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அபிஷேக் பச்சன்.

அவர் பேசுகையில்…. எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை. துரதிஷ்டவசமாக எல்லோரும் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்.

அதை ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. அவர்களுக்கு நல்ல செய்திகள் தேவைப்படுது.

நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களை வைத்து பயன்படுத்தி விவாகரத்து வதந்தி செய்தியை இப்படி பரப்பி விடுகிறார்கள் .

எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவே இல்லை என தெளிவான விளக்கத்தை கொடுத்தார் அபிஷேக் பச்சன்.

மேலும் ஐஸ்வர்யா ராய் கொடுத்த பேட்டி ஒன்றில்…குழந்தை பிறப்புக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிப்பதில் குறைத்துவிட்டது ஏன்? என கேள்வி கேட்டதற்கு… பதில் அளித்த அவர்,

“நான் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விட்டேன்.

எனவே நான் குடும்பம் குழந்தைகள் இதை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்ள பாடுப்படுகிறேன்.

தாய்மையால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை:

எனவே திரைப்படங்களில் அவ்வப்போது என்னால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இருந்தாலும் நல்ல கதைகளுக்காகவும் நல்ல ஸ்கிரிப்டுக்காகவும் காத்திருக்கிறேன் .

அப்படி எனக்கு பிடித்தமான ஸ்கிரிப்ட் வந்தால் அந்த திரைப்படத்தில் நான் நிச்சயம் நடிப்பேன். தொடர்ந்து படங்களில் ஒத்துழைத்து நடிக்க விரும்புகிறேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

பின்னர் தாய்மையால் உங்கள் மனைவியின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதா என கேட்டதற்கு பதில் அளித்த அபிஷேக் பச்சன்… ஆம், ஐஸ்வர்யா ராய் குழந்தையை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்வார் .

அவரை காட்டிலும் ஒரு சிறந்த தாய் இல்லை என்ற அளவுக்கு எனக்கு தோன்றும். அவ்வளவு சிறப்பாக என்னுடைய மகள் ஆராத்யாவை அக்கறையோடு கவனித்துக் கொள்வார்.

அதனால் தான் அவருடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை என அபிஷேக் பச்சன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.தற்போது இந்த பேட்டிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version