ஐஸ்வர்யா ராய் உடன் டைவர்ஸ்..? இதெல்லாம் தான் காரணம்..! அதிர்ச்சி கொடுத்த கணவர் அபிஷேக் பச்சன்..!

உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டவர்.

தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் வெளி வந்த பிரம்மாண்டமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2-ல் நந்தினியாக கலக்கி இருந்தார்.

ஐஸ்வர்யா ராயுடன் டைவர்ஸ்..

இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் ஹிந்தி திரைப்பட நடிகர்களை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்ததாக வெளி வந்த செய்திகளை அடுத்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இணையம் முழுவதுமே ஐஸ்வர்யா ராய் தன்னுடைய காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

எனினும் இது குறித்து இருவருமே இது வரை பேசி வராத நிலையில் இவர்களது டைவாஸை உறுதி செய்யக்கூடிய வகையில் அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த நிகழ்வானது ரசிகர்களின் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அபிஷேக் பச்சன் சுமார் 3000 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை பெற்றிருப்பவர் என்பதால் தன்னுடைய மகள் ஸ்வேதா நந்தாவிற்கு சமீபத்தில் தன்னுடைய ஜுஹு பங்களாவை பரிசளித்தது இந்தப் பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதுதான் காரணமா?..

அது மட்டுமல்லாமல் அண்மையில் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து வெளி வந்த பதிவு ஒன்றுக்கு லைக் செய்து இருப்பதை அடுத்து இவர் ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து பெறுவது உறுதியாகி உள்ளது போல் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அம்பானி வீட்டு திருமணத்தில் தன் கணவரோடு வராத நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளோடு வந்திருந்து தம்பதிகளை வாழ்த்தியதோடு பழம் பெரும் நடிகையான ரேகாவை கட்டியணைத்து தனது அன்பினை பகிர்ந்து கொண்டார்.

இந்த நடிகை ரேகா அமிதாப்பச்சனின் முன்னாள் காதலி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அவர் மாமியார் ஜெயா பச்சன் கல்யாணம் நடந்த இடத்தில் இருந்த போதும் அவரைக் கண்டு கொள்ளாமலும் பேசாமலும் ஒதுங்கிப் போன ஐஸ்வர்யா ராய் ரேகாவை ஆரத் தழுவியது எதிரிக்கு எதிரி நண்பன் போல என்ற பாணியில் உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

அதிர்ச்சியை தந்த கணவர் அபிஷேக் பச்சன்..

இந்நிலையில் அபிஷேக் பச்சன் இணையத்தில் வெளி வந்த விவாகரத்து குறித்த பதிவிற்கு லைக் செய்ததும் தற்போது அம்பானி வீட்டில் தன் மனைவியோடு கலந்து கொள்ளாததும் இவர்களது பிரச்சனைக்கு நடிகை ரேகாவும் காரணமாக அமைந்து இருப்பதாக செய்திகள் வெளி வந்து உள்ளது.

இந்நிலையில் திரையுலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் மத்தியில் தற்போது சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அடுத்து விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது.

அதற்கு சான்றாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளி வரக்கூடிய நிலையில் இவர்கள் இணைந்து வாழ்கிறார்களா? என்பதை இவர்கள் தான் சொல்ல வேண்டும் என பேசி இருக்கிறார்கள்.

இதனையடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version