முன்னாள் காதலனுடன் சேர்ந்த ஐஸ்வர்யா ராய்..! இப்படியா பேசுவீங்க.. அருவருப்பா இருக்கு.. ஐஸ்வர்யா ராய் வேதனை..

உலக அழகி என்கிற பட்டத்தின் காரணமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தியாவிலிருந்து சென்று உலக அழகி பட்டத்தை பெற்ற பிறகு அவருக்கு திரை துறையில் அதிக வரவேற்புகள் கிடைத்தன.

அதுவரை மாடலிங் துறையில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய்க்கு முதன்முதலாக சினிமாவில் வாய்ப்பை பெற்று கொடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம். தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார் ஐஸ்வர்யாராய். இவரை பொருத்தவரை அனைத்து திரைப்படங்களிலும் இவரை கவர்ச்சியாக பார்க்க முடியாது.

திரைப்படங்களில் பிரபலம்:

ஒரு திரைப்படத்தில் கவர்ச்சி தேவை என்றால் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பார். அதே சமயம் தன்னை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம் என்பதால் தொடர்ந்து மணிரத்தினத்திற்கு நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.

இதற்கு நடுவே ஐஸ்வர்யா ய் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த பொழுது அவரை குறித்து காதல் கிசுகிசுக்களும் இருக்கதான் செய்தன. அப்பொழுது பிரபல நடிகராக இருந்த சல்மான்கானுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் இருந்து வந்தது.

அப்பொழுதே பாலிவுட் சினிமாவில் வெகுவாக இது பேசப்பட்டும் வந்தது. அந்த சமயத்தில் நடிகர் விவேக் ஓப்ராய் கூட ஐஸ்வர்யாராயுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று கூறி சல்மான்கானுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

காதல் விவகாரம்:

இதனால் பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்து பல காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் விவேக் ஓபராய். அந்த அளவிற்கு சர்ச்சையாக சென்ற காதல் சில காலங்களில் முடிவைக் கண்டது. ஐஸ்வர்யா ராயும் சல்மான் காணும் பிரிந்தனர்.

அதற்குப் பிறகு சல்மான்கான் நடிகை கேத்தரினா கைஃபை காதலித்து வந்தார். நடிகை ஐஸ்வர்யாராயை பொருத்தவரை அதற்குப் பிறகு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்சமயம் இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு குறைவான திரைப்படங்களில்தான் ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு ஐஸ்வர்யாராய் தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். அப்பொழுது அவர் நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.

பிறகுதான் அந்த புகைப்படம் உண்மை கிடையாது எனக் கூறப்பட்டது. அது மார்ஃபிங் முறையில் சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் சேர்ந்து இருப்பது போல மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராய் கூறும் பொழுது ”அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது திருமணம் ஆகி ஒரு மகளுக்கு தாயான ஒரு பெண் என்றும் பாராமல் என்னை குறித்து இப்படி பேசுவது அருவருக்கத்தக்க விஷயமாக இருக்கிறது”. என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version