தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் டாஸ்கி ஸ்கின் அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது சீறிய நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார்.
இதனை அடுத்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
அந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு நீ தானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். எனினும் இவர் நடிப்பில் வெளி வந்த அட்டகத்தி என்ற படத்தில் அமுதா கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் 2014-ஆம் ஆண்டு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை பெற்றிருக்கக் கூடிய இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டில் டாடி என்ற ஹிந்தி திரைப்படத்தில் அர்ஜுன் ராம் பாலுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த அவர்களும் இவர்களும், ஆச்சரியங்கள், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
இதனை அடுத்து தர்மதுரை, குற்றமே, தண்டனை, முப்பரிமாணம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செக்கச் சிவந்த வானம், கனா, வடசென்னை, மெய் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அறைக்குள் ஆக்ஷன் சொன்னதும்..
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை அறைக்குள் அழைத்துச் சென்ற இயக்குனரை வெளுத்து வாங்கிய விஷயத்தைப் பற்றி தற்போது ஓப்பனாக பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் அந்த படத்தின் இயக்குனர் என்னிடம் உனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை கோபமாக பேசி காட்டு என்று கூறிய சமயத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன சார் சொல்றீங்க என்று அவரிடமே கேட்டேன்.
அதற்கு அவர் என்னிடம் உன்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் எனவே உனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை பேசி காட்டு என்று கூறியதோடு ஆடிஷன் நடக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
அசிஸ்டன்ட் உடன் அழைக்க சென்ற நான் அவர் கூறியதும் அவரை கெட்ட வார்த்தைகளால் வெளுத்து வாங்கினேன். சில நிமிடங்கள் கழித்து என்ன பத்மா ஷூட்டிங் போகலாமா? என்று கேட்டார்கள். அதற்கு என்ன சார் சொல்றீங்க என்று கேட்டேன்.
இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறனை கெட்ட வார்த்தைகளால் திட்டி ஹீரோயினி வாய்ப்பு பெற்ற ஒரே நடிகை நானாகத்தான் இருப்பேன் என்று கூறிய விஷயமானது இன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனை அடுத்து ரசிகர்கள் இவர் கூறிய விஷயத்தை கேட்டு ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்லாமல் இன்னும் நடிகைகளின் நடிப்புத் திறனை அந்த இடத்திலேயே கணிக்கத்தான் மிகச் சிறந்த இயக்குனர்களாக இருக்கக்கூடிய வெற்றிமாறன் போன்றோர் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் வெற்றி இயக்குனராக திகழ்வதற்கும் இது தான் காரணம் என்று பேசி வருகிறார்கள்.