கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவில் நடிக்கும் போது மட்டுமின்றி, நடிக்க வருவதற்கு முன்பே பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் கிடைத்து விடுகின்றன.

அதாவது நட்சத்திர அந்தஸ்துக்கு வராத காலத்தில், சாதாரண மனிதர்களாக இந்த சமுதாயத்தில் இருந்த அந்த நாட்களில், மற்றவர்களை போலவே திரை நட்சத்திரங்களுக்கும் இனிமையான, அல்லது கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒரு சிறந்த நடிப்பை தந்திருந்தார்.

இதையடுத்து கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், ஹலோ நான் பேய் பேசறேன் போன்ற படங்களில் நடித்தார். இதில் 2021ம் ஆண்டில் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த காக்கா முட்டை படத்தில், 2 பிள்ளைகளுக்கு தாயாக மிகச்சிறந்த நடிப்பை தந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை

இதில் ஜெயிலில் இருக்கும் கணவர், ரயில் தண்டவாளத்தில் கரி எடுத்துவந்து விற்கும் சிறுபிள்ளைகள், வயதான பாட்டி என ஒரு சின்ன வீட்டில் வாழும் ஏழையான பெண் கேரக்டரில், வாழ்ந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இதையடுத்து கனா, நம்ம வீட்டுப்பிள்ளை, சொப்பன சுந்தரி, டாக்ஸி டிரைவர் ஜமுனா என பல படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

அழுத்தமான நடிப்பை தரும் நடிகை

வித்யாசமான கேரக்டர்களில் மிக அழுத்தமான நடிப்பை தரும் மிகச்சிறந்த நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ், அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தனது படங்களில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இளம் வயதில் மிக வறுமையான வாழ்க்கையை கடந்து வந்தவர். இளம் வயதிலேயே தனது இரண்டு சகோதரர்களை இழந்தவர்.

மிக மோசமான அனுபவம்

அப்படி கல்லூரியில் படித்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த மிக மோசமான ஒரு அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படியுங்கள்: பெரிய அதிகாரியின் வேட்டைக்கு இரையான பிரபல நடிகை.. ஹோட்டலில் விடிய விடிய விருந்து..

ஷேர் ஆட்டோவில்

காலேஜ் படிக்கும் போது தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்புறம் திரும்பி போகும் போது ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பயணித்தேன். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நபர், தவறான நோக்கத்தில் என் மீது கை வைத்தார்.

 

மோசமான ஆட்கள்

அப்போது ஆட்டோ டிரைவரிடம், ஏன் அண்ணா இந்த மாதிரி மோசமான ஆட்களை எல்லாம் ஆட்டோவில் ஏத்தறீங்க என்றும் கோபமாக கேட்டேன்.

இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர், அந்த நபரை கடுமையாக திட்டி அவரை அந்த ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுட்டார், என்று கூறியிருக்கிறார்.

மிகப்பெரிய நடிகையான பிறகும், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து மிகவும் வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் குணத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version