பிரபல நடிகை தன்னுடைய கிரஷ் இறந்தபோது எப்படி உணர்ந்தேன் என்பது குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அது வேறு யாருமல்ல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், பர்ஹானா, துருவ நட்சத்திரம், சொப்பன சுந்தரி உள்ளிட்ட ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி பிஸியாக இருக்கும் இவர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தவறுவது கிடையாது. பொதுவாக முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதோடு நடந்து கொள்வார்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள்.
அதற்கென தனியாக பேமெண்ட் எதிர்பார்க்கும் நடிகைகளும் உண்டு ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்த படத்தின் வெற்றிக்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவது கிடையாது.
சமீபத்தில் கோயில்களுக்குள் சில கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறித்த தன்னுடைய பார்வையை பதிவு செய்து ரசிகர் மத்தியில் தனக்கு உண்டான பெயரை கெடுத்துக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று தான் கூற வேண்டும்.
பொதுவாக ஆன்மீகம் மதம் அரசியல் இது சார்ந்த இரு வேறு நிலைப்பாடு கொண்ட கருத்துக்களை பிரபலங்கள் கூறும் பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை கூறுவது மட்டுமில்லாமல் தங்களுடைய கருத்துக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட சக சினிமா ரசிகர் குடும்பத்தில் தங்களுடைய பெயரை டேமேஜ் செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.
குறிப்பாக சினிமா பிரபலங்கள் இப்படியான விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தான் நல்லது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மறுபக்கம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஆனால், அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவி போய்விட்டது மேலும் நடிகர் சுஷாத் சிங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் நடித்த தோனியின் திரைப்படத்தை பார்த்து அவர் மீது எனக்கு கிரஷ் வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கிரஷ்-ஐ ரகசியமாகத்தான் வைத்திருந்தேன். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் கேட்டு என்னையாவது லவ் பண்ணி இருக்கலாமே என்று அவரிடம் கூறியிருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
Summary in English : Actress Aishwarya Rajesh revealed in an interview that she had a crush on the late actor Sushanth Singh Rajput. She opened up about this while sharing some of her fondest memories of seeing him on Dhoni Movie.