ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். முதன் முதலில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

அதன்மூலம் இவர் ஒரு அளவுக்கு மக்களின் மனதில் பிரபலமானவராக பார்க்கப்பட்டார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகளையும் தேடி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்து அறிமுகமானார்.

அந்த ஆனால் அந்த படம் அவ்வளவாக பேசும் படியாக அவருக்கு அமையவில்லை. அட்டக்கத்தி அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்த பெரும் புகழ் பெற்றார்.

அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே வந்தார்.

இதனிடையே 2014 ஆம் ஆண்டில் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தமிழக அரசு திரைப்பட விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி மிகச்சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தொடர் ஹிட் திரைப்படங்கள்:

சட்டப்படி குற்றம், அட்டகத்தி, ரம்மி, புத்தகம், பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாவது சினம், மனிதன் , தர்மதுரை,. சாமி 2 ,வடசென்னை, கனா. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இப்போது பார்க்கப்பட்டு வருகிறார் . இதனிடையே தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களின் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். டஸ்கி ஸ்கின் அழகைக் கொண்டு எல்லாவிதமான கேரக்டருக்கும் குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தென்பட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷை கிளாமராக பார்க்க பொதுவாக ரசிகர்கள் யாரும் விரும்புவதே கிடையாது. அவர் கிளாமராக காட்டினாலே அது ஏற்றுக்கொள்ள முடியாததாக ரசிகர்கள் விமர்சித்து வருவார்கள் .

அந்த வகையில் அவர் ஹோமிலியான நடிகையாகவே மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

மேலும், மாப்பிள்ளை குறித்த தகவலும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நகைக்கடை ஊழியருடன் திருமணம்:

ஆம், தற்போது 34 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண பந்தத்தில் இணையாய் இருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் கூட தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் தற்போது திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தயாரிப்பபாளர் ஒருவரின் மகனும் நகைக்கடை அதிபருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா..? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த செய்தி தான் அக்கடதேச ஊடகங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனினும் ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பிலிருந்தோ..? அல்லது மணமகன் தரப்பிலிருந்தோ..? இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version