பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் அதற்கு முக்கியமான காரணம் இவருடைய கதை தேர்வு என்று கூறலாம்.
இவர் நடிக்கக்கூடிய ஏராளமான படங்கள் வெற்றி பெறுகின்றன. வெகு சில திரைப்படங்கள் மட்டுமே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தவறி இருக்கின்றன. அந்த அளவுக்கு தன்னுடைய கதை தேர்வில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால், அழகு சார்ந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகிறார்கள். ஒரு முறை TetX-ல் பேசிய நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ். சினிமாவில் நான் அறிமுகமான புதிதில் நான் கருப்பாக இருப்பதால் பலராலும் கேலிக்கு உள்ளானேன்.
அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. நடிப்புக்கும் நாம் இருக்கும் கலருக்கும் என்ன சம்பந்தம் என்ற தொணியில் பேசியிருந்தார் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் ஆரம்பகால கடினமான பயணங்களை நினைத்து மனம் உருகிப் போனார்கள்.
ஆனால் தற்பொழுது இதே ஐஸ்வர்யா ராஜேஷ் அழகு சாதன விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். முகத்தை வெள்ளையாக்குவதற்கு உண்டான ஒரு கிரீம் விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி வருகிறார்கள்.
நீங்கள் தான் நம்முடைய கலருக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்று கூறினீர்கள். ஆனால், தற்போது நீங்களே இப்படி வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று கூறுவது போல ஒரு விளம்பரத்தில் நடித்திருப்பது எந்த வகையில் நியாயம்..? இது எப்படி சரியாக இருக்கும்.. என்று கடுமையான விளாசல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை சாய் பல்லவி இதே போன்ற ஒரு விளம்பர வாய்ப்பு வந்த போது வெளியே ஜாவ்.. அதனை மறுத்திருக்கிறார். காரணம் பெண்கள் இந்த கிரீம்களை பயன்படுத்தினால் தான் அழகாக இருப்பார்கள்.. அழகாக இருப்பது தான் திறமை அழகாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும் என்ற ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனையை நான் ரசிகர்கள் மத்தியிலும் அல்லது என்னை பின்தொடக் கூடியவர்கள் மத்தியிலும் நான் விதைக்க விரும்பவில்லை.
இயற்கை தான் அழகு.. இறைவன் கொடுத்த இயற்கையான அழகுடன் இருப்பதுதான் அவர்களுக்கு ஆரோக்கியமானதும் கூட என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.
மறுபக்கம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நான் கருப்பாக இருப்பதால் சினிமாவில் நுழைந்த போது பல சங்கடங்களை அனுபவித்தேன் என்று கூறிவிட்டு தற்பொழுது அவரே அழகு சாதன பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருப்பது நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரட்டை நிலைப்பாட்டை கண்டு ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பது என்னவென்றால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள அதே அழகு சாதன பொருளின் மற்ற விளம்பரங்களை நீங்கள் பார்த்தால் இந்த தயாரிப்பை பயன்படுத்துவதன் மூலம் எப்படி உங்களுடைய முகத்தின் வண்ணம் மாறும் என்பதை ஒரு கலர் ஷேடிங் அட்டையை வைத்து காட்டி இருப்பார்கள்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்க கூடிய விளம்பர வீடியோவை பார்த்தால் அதில் அந்த அட்டையை காட்டியிருக்க மாட்டார்கள். காரணம், இந்த தயாரிப்பு உங்களுடைய அழகை கூட்டிக் காட்டுமே தவிர உங்களுடைய வண்ணத்தை மாற்றாது என்பதை உணர்த்துவது தான். விளம்பர ஒப்பந்தத்தில் இந்த விஷயத்தை இணைத்த பிறகு தான் அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கையெழுத்து இட்டார் என்று கூறுகிறார்கள்.
Summary in English :
Aishwarya Rajesh has recently caused quite a stir in the entertainment industry with her dual stance on beauty. The actress recently shared her views on beauty and it has left fans divided. On one hand, she is advocating for people to be comfortable in their own skin and not succumb to societal pressures of being perfect. On the other hand, she is promoting facial beauty products that promise to make you look younger and more beautiful. This has left many of her fans confused as to what message she is trying to send out.