தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில், சுமாரான கேரக்டர்களில் அறிமுகமாகும் சில நடிகைகள் பிற்காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து, முன்னணி நடிகைகளாக மாறிவிடுகின்றனர்.
ஆனால் இதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமை மட்டுமல்ல, அவர்களுக்கு வாய்க்கும் நல்ல நல்ல கேரக்டர்கள் தான். அப்போதுதான் அவர்களால் இப்படி முன்னணி நிலைக்கு வர முடிகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு, காக்கா முட்டை படம் மூலம் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றார்.
இந்த படத்தில் சென்னையில், ஸ்லம் ஏரியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனால் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அது போன்ற எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். அவரது துவக்க காலத்தில் மிகவும் வறுமையை கடந்து வந்திருக்கிறார் என்பதை பல நேர்காணல்களில் அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
காக்கா முட்டை படத்துக்கு பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷூக்குதொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சொப்பன சுந்தரி படத்தில்…
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் மிக அழுத்தமான நடிப்பை தந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளில் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்து வந்தனர்.
இந் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியை மையப்படுத்திய சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் நடித்தார். இப்போது தமிழ் சினிமாவில் உள்ள டாப் 10 நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமாருடன்…
இப்போது ஜிவி பிரகாஷ் குமாருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டியர் என்ற படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கின்றன.
மலையாள படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்துள்ள நிலையில் இப்போது அடுத்ததாக கன்னட மொழியிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கால்பதிக்கிறார்.
உத்தர்காண்டா படத்தில்…
உத்தர்காண்டா என்ற புதிய படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் கன்னட படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், மலையாளம் தொடர்ந்து கன்னடத்திலும் முன்னணி நாயகியாக ஐஸ்வர்யா ராஜா வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டாருடன்…
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஹீரோ கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் என்பதை அறிந்த ரசிகர்கள், அவரது காட்டில் அடைமழை தான் என்று கூறி வருகின்றனர்.