பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு ஏற்ற நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
பல நேரங்களில் பல படங்களில் கதாநாயகர்களுக்கு தங்கையாக நடிக்கும் கதாபாத்திரம் வந்தால் மறுத்து விடுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு முக்கியமான காரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான பாசம் தான் என்று கூறுகிறார்கள்.
இவருடைய இரண்டு அண்ணன்கள் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் இறந்து விட்டனர். இதனால் அண்ணன் சென்டிமென்ட் இருக்கக்கூடிய திரைப்படங்கள் வந்தார் என்னால் நடிக்க முடியாது மிகவும் கடினமான ஒரு மனநிலையில் நான் இருப்பேன்.
அப்படி இருக்கும் பொழுது நான் நடித்தால் அது நிச்சயம் திரையில் தெரிந்து விடும். எனவே அண்ணன் சென்டிமென்ட் கதைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கவே பார்க்கிறேன் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்த இவர் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் கவனத்திற்கு வந்த அதன்பிறகு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.
தற்போது தனக்கென தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது பெற்றிருக்கிறார்.
அதற்கு பிறகு வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 1990 இல் சென்னைக்கு தெரிந்து குடும்பத்தில் பிறந்த இவர் இவருடைய தந்தை ராஜேஷ் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகராக இருக்கிறார்.
ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எட்டு வயது இருக்கும் பொழுது அவர் இறந்திருக்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணி என்பவர்தான் அவரை வளர்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய தாத்தாவும் நடிகராக இருந்திருக்கிறார். இப்படி கலைக் குடும்பத்தில் பிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிப்பு இயல்பாகவே வந்து இருக்கின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்-ற்கு அண்ணன் என்றால் அவ்வளவு பாசமாம். இவருக்கு மொத்தம் மூன்று அண்ணன்கள். முதல் இரண்டு அண்ணன்கள் விபத்தில் சிக்கி இறந்து விட மூன்றாவது மகன் மணிகண்டன் மட்டும் தற்போது இருக்கிறார்.
இவர் பிக் பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நீல நிற உடைகள் கடற்கரையில் கட்டுமஸ்தான உடம்பை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.