திரை உலகில் ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு எண்ணற்ற தடைகளை கடந்து வர வேண்டும். அப்படித்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடுமையான இன்னல்களை தன் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திரை வாழ்க்கையிலும் சந்தித்து இன்று சாதனை நாயகியாக திகழ்கிறார்.
இவர் தனது ஏழாவது வயதில் தனது தந்தையை பறி கொடுத்தவர். அதுமட்டுமல்லாமல் இவர்களை வளர்க்க இவரது தாயார் மும்பையில் இருந்து புடவைகளை வாங்கி வந்து சென்னையில் வீடு, வீடாக சென்று விற்று இருக்கிறார்.
இதனை அடுத்து இவரது ஒரு அண்ணன் காதல் தோல்வியால் இறந்து விட, நல்ல வேலையில் இருந்த மற்றொரு அண்ணன் விபத்தில் இறந்து போக குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்த சமயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எண்ணற்ற துன்பங்களில் தன்னை வருத்திக்கொண்டு தனது விடா முயற்சி மற்றும் மனோ தைரியத்தின் மூலம் இந்த அளவு உயரத்திற்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் முதலில் நடித்த டுபுக்கு திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடாமல் இவரது காலை வாரிவிட்டது. இதனை அடுத்து வாய்ப்புக்களாக பல படிகள் ஏறி இறங்கிய இவருக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
பல இயக்குனரும் நீ இருக்கிற மூஞ்சிக்கு உனக்கு கதாநாயகி வாய்ப்பா? என்று கண்டபடி பேசி இருக்கிறார்கள். அத்தோடு சிரிப்பு நடிகரோடு ரெண்டே சீன்ல நீ சேர்ந்து நடிக்கிறியா? என்பது போல கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பயந்து போன ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டாங்க.. விட்டுடுங்க.. ப்ளீஸ் என்று கதறி இருக்கிறார். இந்நிலையில் தான் அட்டகத்தி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் அட்டகத்தி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி, யார் இந்த நடிகை என்று கேட்கக் கூடிய வகையில் இவரது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் விஜய் சேதுபதியோடு இணைந்து மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தினார். அட.. யாருயா.. இந்த பொண்ணு.. என்று கேட்க தூண்ட வகையில் இவரது திறமையை வெளிப்படுத்த பக்க பலமாக இருந்தது காக்கா முட்டை திரைப்படம்.
இந்த படத்தின் மூலம் இவருக்குள் ஒரு சாவித்திரி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இதனை அடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றியைத் தர தமிழ் மட்டுமல்லாமல் அக்கட தேசப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆவதற்கு தகுதி உடையவர் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை வெள்ளை நிற அழகிகளுக்கு முக்கியத்துவம் தந்த காலம் போய் டஸ்கி ஸ்கின் அழகையும் திரையில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்த வெற்றியாளர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இவர் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கும் சிக்கல்களை சந்தித்து தான் திரை வாழ்க்கையில் இன்று உச்சத்தை அடைந்திருக்கிறார் என்கிற விஷயத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதர் தெரிவித்திருக்கிறார்.