டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் தொடை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் ப்ரா.. தெறிக்க தெறிக்க கிளாமர் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கருப்பு நிறத்தில் இருக்கும் பெண்கள் அவ்வளவு எளிதாக சினிமாவிற்குள் வந்துவிடுவதில்லை. அதற்காக அவர்கள் கடந்து வரும் பாதை மிக பெரியதாக இருக்கிறது.

அதே வகையில்தான் ஐஸ்வர்யா ராஜேஷும் நிறைய போராட்டங்களை தாண்டி தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்றுள்ளார். தற்சமயம் தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார்.

ஆனால் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு நிறைய போராட்டங்களை  ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கையில் பார்க்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில்தான் முயற்சித்து வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சின்னத்திரை மூலம் அறிமுகம்:

முதன் முதலாக அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் காமெடியில் பெரிதாக அவரால் எதுவும் சாதிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட வேண்டும் என்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த நிகழ்ச்சி அவருக்கு கொஞ்சம் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. பலர் கவனிக்கும் வகையிலான நடனத்தை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ் .அதனை தொடர்ந்து அவருக்கு திரை துறையில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

அட்டகத்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவக்கினார். அதற்கு பிறகு மிக தாமதமாகதான் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

கதாநாயகியாக வளர்ச்சி:

ரம்மி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முதலாக முக்கிய கதாபாத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து திருடன் போலீஸ் திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்தார். விஜய் சேதுபதி ஆரம்பகால கட்டங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவர் கூறிதான் காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார்.

பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் காலகட்டத்தில் எந்த நடிகையும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிந்து காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் நான் அவருக்கு அதிகமான வாய்ப்புகளை பெற பெற்றுக் கொடுத்தது.

வெகு நாட்களாக டீசண்டான உடையில் காட்சி கொடுத்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக மாடர்ன் ட்ரெண்டுக்கு மாறி இருக்கிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வரவேற்பை பெற துவங்கியிருக்கின்றன. சமீபத்தில் கூட அப்படியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version