Site icon Tamizhakam

வெளிநாட்டு வீதியில் தொடையை வெளிச்சம் போட்டு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! திணறுது இன்ஸ்டா..!

தனது நிறத்தின் காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்த நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இளம் வயதிலிருந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. பொதுவாகவே நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் பெண்கள் கதாநாயகி ஆவதற்கு ஆசைப்படுவது அரிதான விஷயமாகும்.

இருந்தாலும் அந்த கனவை சென்று தொட்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சின்னத்திரை மூலமாகதான் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும் என்பதை அறிந்து இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ்  சன் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தார்.

சின்னத்திரையில் வரவேற்பு:

அதனை தொடர்ந்து அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற நினைத்தார். ஆனால் காமெடி என்பது அவருக்கு அவ்வளவாக வரவில்லை. அதனை தொடர்ந்து நடன கலைஞராக மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

மானாட மயிலாட நிகழ்ச்சி இவருக்கு கொஞ்சம் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு புது முகங்களை பா.ரஞ்சித் தேடிக் கொண்டிருந்தார்.

ஏனெனில் அந்த திரைப்படத்தின் மூலமாகதான் அட்டகத்தி தினேஷும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனால் எளிமையாகவே அந்த திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில்தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கதாநாயகியாக வாய்ப்பு:

அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதைவிட அதிக வரவேற்பை 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படம் பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக கதாநாயகியாக நடித்த தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்சமயம் பெண் கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாரம்பரிய உடையில் மக்கள் மத்தியில் தோன்றி வந்தாலும் கதாநாயகி என்பதால் தற்சமயம் கவர்ச்சி பக்கமும் தலைகாட்டி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்து வருகின்றன  சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கு வெளியிட்டு இருக்கும் மாடர்ன் புகைப்படங்கள்தான் தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

என்ன இவ்ளோ பெருசா இருக்கு.. என்னை விட்ருங்கன்னு கதறினேன்.. ஆனால்.. நடிகை லட்சுமி ஓப்பன் டாக்..!

Exit mobile version