உங்க புருஷன் குடிச்சிட்டு என்கிட்ட தகராறு பண்றாரு..! – பிரபல நடிகரின் மனைவியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கதறல்..!

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் உங்களுடைய கணவர் குடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார்.

இவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார். அதனால் நான் உங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருக்கிறேன். உடனடியாக காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவியிடம் பிராங்க் செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக நடிகர் நடிகைகள் இது போன்ற பிராங்க் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது வாடிக்கை. அந்த வகையில், பிரபல யூட்யூப் சேனல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்ய ராஜேஷ் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் அவருடைய மனைவியை பிராங்க் செய்த வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோபோ சங்கரின் மனைவிக்கு போன் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் நான் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஷாலினி பேசுகிறேன். உங்களுடைய கணவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார்.

இதனால் ஒருவர் காயம் அடைந்து இருக்கிறார். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகிறார். அப்போது குறிப்பிட்ட ரோபோ சங்கரை பார்த்து நீங்கள் அமைதியாக இருங்கள் அமைதியாக இல்லை என்ற இல்லை என்றால் கம்பிக்கு பின்னால் தான் இருக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.

இதனை கேட்டு பதறிய ரோபோ சங்கரின் மனைவி மேடம் உங்களுடைய பெயர் மிகவும் க்யூடாக இருக்கிறது. அஜித் சாருடைய மனைவியின் பெயர். தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். அவர் எப்போதும் தெளிவாகத்தான் இருப்பார் என்று யாராவது நண்பர்கள் சந்தித்து இருப்பார் அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று பேசுகிறார்.

ஆனால் தொடர்ந்து அவருடைய மனைவியை மிரட்டிக்கொண்டே இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் நான் பிராங்க் செய்கிறேன் என்று அவரிடம் கூற அரங்கமே கலகலவென இருக்கின்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam