நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் காதலர் தினம் குறித்த கேளிக்கைகள்… மீம்கள்.. சிங்கிள்ஸ்களின் வேதனைகள்..
காதலர்களுக்குள் வாழ்த்துக்கள்.. பிரபலங்களின் வாழ்த்துக்கள் என நிரம்பி.. ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒரு வழியாக இதெல்லாம் அடங்கியிருக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது.. ஒவ்வொன்றாக பதிலளித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இறுதியாக ஆண் நண்பரா அல்லது பிரியாணியா என்ற கேள்வி தோன்றுகிறது.
இதனை பார்க்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியாணி தான் முக்கியம் என்கிறார் மேலும் பாய் பிரண்ட் இல்லை என்றால் என்ன நமக்கு பிரியாணி தான் முக்கியம் பசி அடக்குவதற்கு என்று கூறி ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு பிரியாணி பிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் உங்களுக்கு நிஜமாகவே பாய் பிரண்ட் இல்லையா..? நாங்கள் வேண்டுமென்றால் பாய் பிரண்டாக வரலாமா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது இணைய பக்கங்களில் இப்படியான வீடியோக்கள் மற்றும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Summary in English : As an avid foodie, Aishwarya Rajesh has always been vocal about her love for biriyani. In a recent video, she revealed her preference for the delicious delicacy over having a boyfriend.