ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை தடை பண்ணுங்க..! – கொந்தளிக்கும் அரசியல் கட்சி..! – பரபரப்பு தகவல்கள்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) : இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய பர்ஹானா எனும் திரைப்படம் தற்சமயம் சர்ச்சையில் சிக்கி உள்ளது இந்த படத்தை தடை செய்யக் கோரி இந்திய தேசிய முஸ்லிம் லீக் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார் இந்த படத்தின் கதை மத கட்டுப்பாடுகளை கடந்து தன்னுடைய குழந்தைகளுக்காக வேலைக்குச் செல்லும் ஒரு தனி பெண்ணின் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளார் நெல்சன் வெங்கடேசன்.

Image source:google

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் Indian National League கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தடா அப்துல் ரஹீம் இந்த படத்திற்கு எதிராக புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு முஸ்லிம் பெண் உலகம் முழுவதும் சுற்றி புர்கா அணிந்து கொண்டு வலம் வருவதைப் போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டிருக்கும் இது இஸ்லாமிய பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக உள்ளது என்று முஸ்லிம் லீக் கட்சியின் அப்துல் ரஹீம் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Image source:google

அதேபோல சமீபத்தில் ஓட்டிட்டு தளத்தில் வெளியான புர்கா எனும் திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையையும் விடுத்துள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்த சர்ச்சுனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Image source:google

இவர் இப்படி கூறியிருப்பது மக்களிடையே ஒரு விதமான கிளர்ச்சியை உண்டு செய்து வருகிறது முஸ்லிம் பெண் என்றால் வீட்டிற்குள் அமர்ந்து சமையல் செய்வது ஆண்களுக்கு பணிவிடை செய்வது மட்டும்தான் என்று நிறைய பெண்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு நிறைய மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பி இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …