200 கோடியில் ரஜினிக்கு புதிய வீடு..! அப்பாவுக்கு இத்தனை வசதிகளா..? கிறுகிறுன்னு வருதே..!

பணம் பத்தும் செய்யும் என்பதை சிலர், தங்களது வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டுவதில் அதிக ஆர்வமும் முனைப்பும் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அள்ள அள்ள குறையாத அளவுக்கு பணம் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கும் பட்சத்தில், அதை எந்த வகையில் செலவு செய்வது என்பது அவர்களுக்கு சில நேரங்களில் மலைப்பாக தோன்றும்.

அந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருத்தருக்கு போட்டியாக, சவாலாக எடுத்துக் கொண்டு அந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. ஒரு பெரிய கவுரவத்தை, தங்களது ஈகோ பிரச்சனையை அந்த செலவின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று சூழ்நிலை உருவானால், அதற்கு அந்த பணம் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது.
ஏனெனில் இங்கு மனிதர்களின் கவுரவ பிரச்னை பணத்தில் நீ கொம்பனா, நான் கொம்பனா என பார்த்து விடலாம் என்று கொம்பு சீவிக் கொள்கின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்த போது ஒரு வளர்ந்து வரும் நடிகராக தனுஷ் இருந்தார். ஆனால் இப்போது அவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 5 வயது தன்னைவிட மூத்தவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷ், இரண்டு ஆண் மகன்களுக்கு இருவரும் பெற்றோராக இருக்கிறார்கள்.

லதா ரஜினிகாந்த்

இந்த சூழ்நிலையில் தனுஷின் குடும்பத்தை, ரஜினிகாந்த் குடும்பம் மிகவும் அவமதித்து, கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அம்மா லதா ரஜினிகாந்த், தனுஷ் குடும்பத்தை சிறிதும் மரியாதை இன்றி நடத்தியுள்ளார்.

பலமுறை அவர்கள் வீட்டுக்கு வந்த போது, அவர்களை உதாசீனப்படுத்தி கேவலப்படுத்தி, மற்றவர் முன்னிலையில் தரக்குறைவாக பேசி பலமுறை அவர் இகழ்ந்து நடந்து கொண்டதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக தான் தனுஷ் ஐஸ்வர்யா இடையே முதல் கட்டமாக மோதல் வெடித்தது என்றே கூறப்படுகிறது.

200 கோடி ரூபாயில்…

தன்னுடைய தந்தைக்காக 200 கோடி ரூபாயில் புதிய மாளிகை ஒன்றை கட்டியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதற்கு முக்கிய காரணம் ஈகோ என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

செய்யாறு பாலு

பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, ரஜினிகாந்த் வசித்து கொண்டிருக்கும் அதே பகுதியில் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டை விட பல மடங்கு பெரிய வீட்டை கட்டி இருக்கிறார். ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் வீட்டாருக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் போதுமான மரியாதையை கொடுக்கவில்லை.

ரஜினிக்கு தனி வசதிகள்

தனுஷ் குடும்பத்தினர் எப்போதெல்லாம் தங்கள் வீட்டிற்கு வருகிறார்களோ..? அப்போதெல்லாம் மரியாதை குறைவாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள்.. இப்படி தங்களுடைய தன்மானத்தை சோதித்து பார்த்ததால்தான், தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்தார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை,

இந்நிலையில் தங்களை விட தனுஷ் பெரிய வீட்டில் இருப்பதா..? என்ற முடிவு செய்து 200 கோடி ரூபாயில் ரஜினிகாந்த் இருக்க புதிய வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் அவருடைய மகள் ஐஸ்வர்யா என்றும், இந்த வீட்டில் ரஜினிக்கு என தனிப்பட்ட வசதிகள் ஏராளமாக செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் செய்யார் பாலு அவர்கள்.

அரண்மனை வாழ்வு

200 கோடியில் ரஜினிக்கு புதிய வீட்டைக் கட்டி, அப்பாவுக்கு ஏகப்பட்ட வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கிறுகிறுன்னு வருதே என்று ரசிகர்கள் புலம்பினாலும், 73 வயதிலும் இப்படி அரண்மனை வாழ்வு ரஜினிக்கு வாய்த்திருக்கிறதே என்று புலம்பவும் செய்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version