என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து மனு

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து விடுவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு, சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் வரும் ஆறு மாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. எப்படியும் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றுதான் கூறப்படுகிறது .

பிரிந்து விடுவதே முடிவு

தங்களது பிள்ளைகள் யாத்ரா, லிங்கா ஆகியோரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரஜினி, கஸ்தூரிராஜா உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவது என்ற ஒரு உறுதியான முடிவில் இருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் பிரிவது, ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்களுக்கு சட்டபூர்வமான விவாகரத்து கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு

இந்நிலையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ப் லவ் தொடர்பாகவும், தன்னம்பிக்கை தொடர்பாகவும் அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

எதிர்பார்ப்பே இருக்கக் கூடாது

அந்த வகையில் இப்போது செய்துள்ள பதிவில், வாழ்க்கையில் பார்க்கிற சில விஷயங்கள் நமக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அந்த விஷயங்கள் நமக்கு கிடைத்த பிறகு, நம்மிடம் வந்து சேர்ந்த பிறகு, எப்போதும் அது நமக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பது அந்த எதிர்பார்ப்பு பல நேரங்களில் பொய்யாகிவிடும்.

அதனால் அந்த விஷயத்தில் நம் எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டால், அது மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

நன்றாக இருக்க வேண்டும்

மேலும் நாம் விரும்புகிற, நாம் மிகவும் அன்பு கொள்கிற சில மனிதர்கள் மீது அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ,ஒரு சூரியனைப் போல அவர் வாழ்க்கையில் நிறைய வெளிச்சத்தை கொண்டுவர நினைப்போம்.

ஆனால் அதே நேரத்தில், அந்த வெளிச்சத்துக்கு இடையூறாக மழை வந்து விட்டால், அவர்கள் நம்மை, நாம் காட்டிய அன்பை வெறுத்து விடுவார்கள். அப்படி மழை வந்தபோதும், அவர்கள் நம்மை வெறுத்தாலும், அவர்கள் மீதான நம் அன்பை குறைத்துக் கொள்ளக் கூடாது என்பது போன்ற அர்த்தத்தில் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

காதல் உணர்ச்சி இல்லைன்னா…

இதன் மூலம் தனுஷ் மீது தான் காட்டிய அன்பையும், அவர் ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து விலகிய அந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த பதிவை அவர் செய்திருப்பதாக ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?

ஆனால் உண்மையில், என் மேல் உனக்கு அந்த காதல் உணர்ச்சி இல்லைன்னா.. கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல என்பதை தான் இந்த பதிவின் வாயிலாக போட்டு தாக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version