சினிமா நடிகைகளே தோற்றுவிடும் கவர்ச்சி.. இன்ஸ்டாவை கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சினிமா துறையில் இருப்பவர்களுக்கு எப்படியேனும் ஒரு விதத்தில் தங்களுக்கு புகழும் மக்கள் செல்வாக்கும் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களால் மூச்சு விட முடியாத அளவுக்கு ஒரு திணறல் நிலை ஏற்படும் போல இருக்கிறது.

ஏற்கனவே மிகப்பெரிய நடிகரின் மகள், பிரபல நடிகரின் மனைவி என்ற அந்தஸ்து உள்ள நிலையிலும், தனக்கான ஒரு புகழும் செல்வாக்கும் வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொள்வது என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள். நடிகர் தனுஷின் மனைவி என்ற அடையாளங்களை கொண்டவர். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு வளர்ந்த மகன்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாயாக இருக்கிறார்.

எனினும் தன்னை எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அக்கறையும் அதிகமாக இருப்பதால் இவர் தனுஷ் மனைவியாக, நடிகர் ரஜினிகாந்த் மகளாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது தன்னை டைரக்டராகவும் வெளிப்படுத்தி கொள்கிறார்.

இதற்காக இயக்குனர்கள் பி வாசு, மணிரத்னம், செல்வராகவன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து 3 என்ற படம் எடுத்தார். அது தோல்விப் படமானது.

தொடர்ந்து தோல்வி

அடுத்து கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து, வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதுவும் பிளாப் ஆகிப் போனது. அதன் பிறகு சமீபத்தில் ரஜினிகாந்த் கேமியோ நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அதுவும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்சன் துறையில் மூன்று முறை படுதோல்வி அடைந்த நிலையிலும், இன்னும் அவர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி நடிகையாக…

அதனால் இப்போது வயது 40 வயதுகளை கடந்த நிலையில், கவர்ச்சி நடிகை போல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் வகையில், உடலின் அந்தரங்க பாகங்களை தூக்கலாக காட்டுகிற வகையில், இப்படி அவர் போஸ் தந்திருப்பது ரஜினி ரசிகர்களையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நயன்தாரா, திரிஷா போல…

இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டைரக்டர் ஆக மூன்று படங்களை இயக்கி தோற்றுப் போய் விட்டோம், இனி கணவர் தனுஷ் போல, அப்பா ரஜினி போல நாமும் ஒரு பெரிய நடிகையாகி தமிழ் சினிமாவில் ஒரு நயன்தாரா, ஒரு திரிஷா போல வலம் வரலாம் என்ற முடிவுக்கு ஐஸ்வர்யா வந்திருக்கலாம் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

ஆனாலும் சினிமா நடிகைகளே தோற்றுவிடும் கவர்ச்சியில், இன்ஸ்டாவை கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version