ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் இவரின் முன்னால் கணவனான தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடித்திருந்தார்கள்.
இதனை அடுத்து தற்போது தன் கணவனை விட்டு பிரிந்து வாழக்கூடிய இவர் திரை உலகில் அதிக கவனத்தை செலுத்தி விடுகிறார். மேலும் இவர் தனது தந்தையை வைத்து இயக்கப் போகும் லால் சலாம் என்ற படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் இசை அமைக்கும் பணிகளை தீவிரம் காட்டி வருகிறார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தின் கதைக்களத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க சிறப்பு வருடத்தின் ரஜினிகாந்த் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கான பூஜை அண்மையில் தான் நடைபெற்ற முடிந்தது. இதனை அடுத்து ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் இந்த படத்திற்கான இசை அமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.
இதனை அடுத்து மும்பையில் உள்ள ரகுமானை சந்தித்த ஐஸ்வர்யா புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் லால் சலாம் படத்திற்காக இவர்கள் இருவரும் ஒன்றாக மெட்டுப் போடும் படியான காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை பட்டையை கிளப்பியதோடு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது.
இதனை அடுத்து தற்போது இந்த படத்திற்கான இசையில் களம் காண இருக்கும் இவர் புதிய வகையில் ரசிகர்களின் மனதை தொடும்படியாக உள்ள பாடல்களை தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தற்போது இந்த லால் சலாம் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றால் அது ஐஸ்வர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வழங்கும் பொழுது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.