ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவு போட்டோ ஷூட்…! 40 வயதில் ரசிகர்களை அசர வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாகிய ஐஸ்வர்யா தனது முன்னாள் கணவர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இவர் திரைப்பட பக்கம் அதிக அளவு கவனம் செலுத்தி வருவதோடு லைக்கா நிறுவனம் தயாரிக்கின்ற ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார்.

மேலும் இந்த படத்தில் விக்ரம் மற்றும் விஷால் நடிக்கிறார்கள். இந்தப் படமானது கிரிக்கெட்டை மையமாகக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் புத்தாண்டுக்கு பிறகு எடுக்கப்படும் என செய்திகள் வந்துள்ளது.

 ஏற்கனவே இவர் மூன்று, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக அவர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் இவரது தந்தை சிறப்பு தோற்றத்தில் நடிப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக இருக்கும்.

 தற்போது 40 வயதை தொட்டிருக்கும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டாப் நடிகைகளுக்கே டாப் கொடுக்கக் கூடிய வகையில் போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். இந்த போட்டோ சூட்டில் உள்ள புகைப்படங்களை பார்த்த அனைவரும் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்டும் அளவு இந்த புகைப்பட சூட் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

 பிளாக் அண்ட் ஒயிட்டில் தரமாக வைட் டிரஸ்சில் நாட்காலியில் அமர்ந்தபடி இவர் பார்த்திருக்கும் பார்வைக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சம் அடிமையாகி விட்டது என்று கூறும் அளவு தான் உள்ளது.

 மேலும் எந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் டைரக்ட் செய்வதை விட நடித்தால் இன்னும் நிறைய புகழை சம்பாதிக்கலாம் என்று கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

 ரசிகர்களின் மனதை மொத்தமாக கொள்ளை அடித்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமாண்டுகளை ரசிகர்கள் போட்டு வருகிறார்கள்.

 இதை அடுத்து எதற்காக இதுபோன்ற புகைப்படத்தை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் என்பது கூட தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை உற்றுப் பார்த்த வண்ணம் இருப்பதால் இளசுகளின் மனதில் ஏதோ ஒரு உணர்வை இது ஊன்றுவிட்டது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam