விவாகரத்து மனு தாக்கல் செய்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த முடிவு..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் பிரபல நடிகரான தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆகவும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவராகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்துவரும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ரஜினியின் மகளை என்று தனுஷ் பிடித்தாரோ அன்று முதல் அவருக்கு யோகம் அடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் தனுஷ் எந்த படத்தில் கமிட்டானாலும் அந்த படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வெளியாக ரஜினி மறைமுகமாக இருந்து தன் மருமகனுக்கு உதவி செய்து அவரை நட்சத்திர நடிகராக டாப் அந்தஸ்தில் உயர்த்தி நிறுத்தி வைத்தார்.

ரஜினிக்கு துரோகம் செய்த தனுஷ்:

இதற்கு முழுக்க முழுக்க காரணம் ரஜினிகாந்த் தான் என கூறப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது தனுஷ் ரஜினிக்கு நன்றி கடனாக அவரது மகளையும் அவரது குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளாமல் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள், ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகுவது அவர்களுடன் கிசுகிசுப்பில் சிக்குவது இப்படியாக இருந்து வந்தார்.

இதனில் தனுஷ் மீது ரஜினிக்கு வெறுப்பு உண்டாகிவிட்டதாம். அத்துடன் ஐஸ்வர்யா மற்றும் தனுஷுக்கு இடையே கூட அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.

அமலா பால் உடன் தகாத உறவு:

குறிப்பாக அமலா பால் விவகாரத்தில் தனுஷ் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் எனக் கூறப்பட்டது. விஐபி படத்தில் அவருடன் நடிக்கும் போது தனிமையில் தங்கியதாகும் வீடு எடுத்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

பின்னர் ரஜினி அமலாபாலை நேரடியாக அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்க்கே சென்று எச்சரித்ததாகவும் பின்னர் பட வாய்ப்புகளே தமிழில் அமலா பாலுக்கு கிடைக்காத வகையில் அவரை ஊரைவிட்டு ஓடவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியது .

இப்படி இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷுக்கு இடையே மோதல் முற்றிய நிலையில் அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து மனம் திரும்ப கேட்டுக் கொண்டனர்.

அதன் பிறகு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்தியாக சமீபத்தில் வெளிவந்திருந்தது.

புதிய வீட்டை கட்டி குடிபெயர்ந்த ஐஸ்வர்யா:

இப்படியான நேரத்தில் ஐஸ்வர்யா தனுஷை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் தற்போது தனக்கென புதிய வீடு ஒன்றை வாங்கி பிரம்மாண்ட கிரக பிரவேசத்தையும் நடத்தி இருக்கிறார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த கிரகப்பிரவேசத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படங்கள் புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.

முன்னதாக தனுஷ் இதேபோன்று ரஜினி வீட்டை விட்டு பிரிந்து சென்று தனது அப்பா அம்மாவுக்காக ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டி கொடுத்தார்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கென சொந்த வீடு கட்டி குடி புகுந்து இருப்பதால் இவர்கள் தனித்தனியே வாழ்வதில் உறுதியாகி விட்டார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version