சூர்யாவை நா ஒருநாளும் அப்படி கூப்ட்டது இல்ல.. பல நாள் ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா..!

நடிகை ஐஸ்வர்யா, நடிகை லட்சுமி மகள். நடிகை லட்சுமி ஒரு பழம்பெரும் நடிகை. மாட்டுக்கார வேலன் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு எம்ஜிஆருக்கு லட்சுமி ஜோடியாக நடித்திருப்பார்.

லட்சுமி

நடிகர் சிவக்குமாருக்கு 1980களில் வந்த பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை லட்சுமி. அந்த வகையில் சிவக்குமார் குடும்பத்துக்கும், லட்சுமிக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு.

நடிகை லட்சுமி பல படங்களில் நடித்திருந்தாலும், சம்சாரம் அது மின்சாரம் படத்தில், அம்மையப்ப முதலியார் கேரக்டரில் நடித்த விசுவுக்கு மருமகளாகவும், சிதம்பரம் கேரக்டரில் நடித்த ரகுவரனுக்கு மனைவியாகவும் மிக அழுத்தமான, மிக அழகான, மிக இயல்பான நடிப்பை தந்திருப்பார் நடிகை ,லட்சுமி.

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக எனக்குள் ஒருவன் படத்தில், தமிழக அரசின் தலைமை செயலாளராக கெத்தான நடிப்பை தந்திருப்பார் லட்சுமி.

லட்சுமியின் மகள்

நடிகை லட்சுமியின் மகள்தான் ஐஸ்வர்யா. தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அம்மாவை போலவே, மகளும் நடிப்பில் கெட்டிக்காரத்தனம் மிக்கவர். எந்த கேரக்டர் என்றாலும் அனாயசமாக நடித்து விடுவார்.

ஐஸ்வர்யா

குறிப்பாக ராசுக்குட்டி படத்தில் கே பாக்யராஜ் ஜோடியாக ருக்மணி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதில் நடிப்பில் பல காட்சிகளில் அசத்தியிருப்பார்.

இதையும் படியுங்கள்: முக்கிய நபரின் மரணம்.. உடைந்து போன நடிகர் விஜய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

நடிகர் பார்த்திபனுடன் உள்ளே வெளியே என்ற படத்தில் நடித்திருந்தார். சுயம்வரம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். எஜமான், மரிக்கொழுந்து உள்பட பல படங்களில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார்.

ஒரு கட்டம் வரை ஹீரோயின் நடிகையாக நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு அம்மா, அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார்.

அம்மா கேரக்டர்

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் பிரகாஷ் ராஜூக்கு மனைவியாக நடித்திருப்பார்.அபியும் நானும் என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவியாக, திரிஷா அம்மாவாக நடித்திருப்பார்.

இதில் ஆறு படத்தில் சவுண்ட் சரோஜா கேரக்டரில் சேரியில் வாழும் பெண்ணாக ஐஸ்வர்யா நடித்திருப்பார். இந்த படத்தில் அரசியல் கட்சி மேடைகளில் எதிர்கட்சி அரசியல்வாதிகளை கண்டபடி பேசும் ஒரு மகளிரணி தலைவி கேரக்டரில் சூப்பராக நடித்திருப்பார்.

ஆறு

நடிகர் சூர்யாவுடன் ஆறு திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை ஐஸ்வர்யாவிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சரவணன் உடன் நான் ஆறு படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பல வருடங்கள் கழித்து ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது அந்த படம். சரவணன் அந்த அளவுக்கு ஒரு நல்ல நடிகர் சரவணன் என்று நான் சூரியாவை தான் சொல்கிறேன்.

சூர்யா

சூர்யாவை நான் சூர்யா என்று கூப்ட்டது கிடையாது. சிறுவயதிலிருந்து அவனை எனக்கு தெரியும். அதனால் சரவணன் என்றுதான் எனக்கு பழக்கம். சூர்யா என்று ஒரு நாளும் அழைத்தது கிடையாது.

இதையும் படியுங்கள்: விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? முதல் பொண்டாட்டிக்கு மட்டும் எல்லாமே.. பிரபல நடிகர் கேள்வி..!

விளையாடி இருக்கிறேன்

சூர்யாவை விட கார்த்தியுடன் நான் மிகவும் நெருக்கம் அவரிடம் நிறைய விளையாடி இருக்கிறேன் என கூறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா.

நடிகை லட்சுமி, சிவக்குமார் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு தன் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்ற வகையில், அப்போது சிறுவர்களாக இருந்த சரவணன் (சூரியா) கார்த்தி ஆகியோருடன் சிறுமியாக இருந்த ஐஸ்வர்யாவும் விளையாடி இருக்கிறார்.

அந்த உரிமையில்தான், சூர்யாவை நா ஒருநாளும் சூர்யா என்று கூப்ட்டது இல்ல என்று பல நாள் ரகசியம் உடைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version