தனுஷ் தான் அதுக்கு காரணம்.. முதன் முறையாக வாயை திறந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய சக நடிகர் நடிகைகள் அவர்களுக்குள் காதல் ஏற்படுவதை அடுத்து பெற்றோர் சம்பந்தத்தோடும் பெற்றோர் சம்பந்தம் இல்லாமலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் முத்து மீனாவிற்கு வந்த புது பிரச்சனை.. சமாளிக்க போவது எப்படி..? என்ன ஆனது?

நடிகர் தனுஷ்..

இந்நிலையில் நட்சத்திர ஜோடிகளாக உலா வந்த இவர்கள் மண வாழ்க்கையில் மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தார்கள். எனினும் இவர்களது பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை புரியாத புதிதாகவே உள்ளது.

மேலும் தனுஷ் பெண்கள் விஷயத்தில் வீக்கான பேர்வழி என்பதால் தான் அவரை விட்டு விலகியதாக இணையங்களில் செய்திகள் வெளி வந்த போதும் இருவரும் அவர்கள் பிரிவு குறித்து இன்று வரை எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பல்வேறு வகையான விஷயங்களை கூறியதோடு லால் சலாம் படம் இயக்கியதையும் கூறி இருந்தார்.

எல்லாத்துக்கும் காரணம் தனுஷ்..

அந்த சமயத்தில் இவரிடம் இசை அமைப்பாளர் அனிருத் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான். இன்று இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புகழோடு இருக்கும் அனிருத் பற்றி கூறிய விஷயங்கள் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று இவ்வளவு திறமைசாலியாக இருக்க அனிருத்துக்கு சரியான வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தவர். தனுஷ் தான் நான் இல்லை அனிருத்திடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்ததே தனுஷ் தான்.

Ex மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு..

அனிருத்தை வெளிநாட்டுக்கு சென்று படிக்க அனுப்ப அவர்கள் பெற்றோர்கள் முடிவு செய்த போது அவர்களிடம் பேசி மனம் மாற்றியதோடு அனிக்கு கீபோர்ட் வாங்கிக் கொடுத்து 3 படத்தில் இசையமைப்பாளராக போட வேண்டும் என்று கூறினார்.

இன்று அனிருத் நினைத்துப் பார்க்க முடியாத படி உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறார். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனிருத் ஏறும் மேடைகளில் தனுஷ் தனக்கு கொடுத்த வாய்ப்பு பற்றி கூறியிருக்கிறார். அந்த D இல்லைன்னா இந்த A இல்லை என்று மாஸாக கூறியிருப்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

இப்படி தனது முன்னாள் கணவர் பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெருமையாக பேசியதோடு மட்டுமல்லாமல் தனுஷ் தான் அனிருத்தின் வளர்ச்சிக்கு காரணம் என முதன் முறையாக வாய் திறந்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பேச்சு வைரலாகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இசை அமைப்பாளர் அனிருத் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தனுசையும் அவரது வளர்ச்சிக்கு உறுதுணை செய்த ஐஸ்வர்யாவையும் பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: “மனைவி தப்பு பண்ணி புருஷன் கிட்ட சிக்குனா..” முன்னாள் முதல்வரின் வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version