நான் பிரபுவை தான் காதலிக்கிறேன்.. இந்த ஜென்மத்துல அவரோட.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா..!

திரையுலகை பொருத்த வரை புதுமுக நடிகைகள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் நடிகை லட்சுமியின் மகள் என்று சொன்னால் உங்களுக்கு எளிதில் ஞாபகத்திற்கு வரும்.

இதையும் படிங்க: எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தியவர். பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்பதால் திரைப்படத்தில் வாய்ப்பினை பெற்றது  இவருக்கு எளிய ஒன்றாக இருந்தது.

நடிகை ஐஸ்வர்யா..

நடிகை ஐஸ்வர்யா ஆரம்ப காலங்களில் தெலுங்கு படங்களில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் தன்னுடைய அம்மா லட்சுமியை போல திரையுலகில் பிரபலம் அடைய வேண்டும் என்றுதான் நடிப்புத் துறைக்கு வந்தார்.

அந்த வகையில் தமிழில் நியாயங்கள் ஜெயிக்கும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஐஸ்வர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்து தோல்வியை தான் தழுவி இருந்தார்.

இதனை அடுத்து இவரது நடிப்பு ரஜினி நடிப்பில் வெளி வந்த எஜமான் திரைப்படத்தில் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது. இதனை அடுத்து பல படங்களில் நடித்த இருக்கக்கூடிய இவர் தற்போது குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

என்னது.. பிரபுவ காதலிக்கிறார்களா?

இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது தான் பிரபுவை இன்றும் காதலிப்பதாக கூறி குண்டினை தூக்கிப் போட்டுவிட்டார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அத்தோடு அவர் நடிகர் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் சிவாஜியோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அந்த ஏக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. இதனை அடுத்து அவருடைய மகனை நடிகை ஐஸ்வர்யா 16 வது வயதிலிருந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்ற விஷயத்தை கூறி ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் நடிகர் பிரபுவை அவருக்கு அந்த அளவு பிடிக்கும் என்று தொடர்ந்து பேசி அவர் தொகுப்பாளர் இடம் இன்று வரை பிரபுவை உருகி உருகி காதலிப்பதாக கூறினார். மேலும் அந்த தொகுப்பாளர் பிரபுவை தவிர வேறு எந்த நடிகரை யாவது உங்களுக்கு பிடிக்குமா? என்ற கேள்வியை எழுப்பியதற்கு நடிகை ஐஸ்வர்யா தந்த பதில் என்ன தெரியுமா?

இவருக்கு பிரபுவை தவிர வேறு யாரையுமே அந்த அளவுக்கு பிடிக்காதாம். பிரபுவை மட்டும் தான் அதிக அளவு பிடிக்கும். அதனால் தான் இன்னும் காதலிக்கிறேன் என்று மீண்டும் கூறினார்.

குண்டை தூக்கிப்போட்ட ஐஸ்வர்யா..

அத்தோடு இந்த ஜென்மத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன். ஏனெனில் பிரபு என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஐ லவ் யூ பிரபு சார் என்று கூறியிருக்கும் விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

அட.. இந்த வயசில் கூட தனது காதலை வெளிப்படையாக கூறி இருக்கும் ஐஸ்வர்யாவின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு எந்த அளவிற்கு பிரபுவின் மீது கிரஷ்ஷாக இருப்பதின் ரகசியம் என்ன? என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

மேலும் பிரபுவின் நடிப்பும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சான நிலையில் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுவை மீது இந்த அளவு காதலில் ஐஸ்வர்யா இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version