தல அஜித்னா சும்மாவா… படப்பிடிப்புக்கு முன்னரே ஏகே 62 பட ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…!!

தல அஜித் குமாரின் 62 ஆவது படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 தற்போது தல அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்ற நீண்ட வேளையில்,இப்படமானது வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்ற அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்துவிட்டது.

மேலும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார். படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ள நிலையில்  படத்திற்கான இசையை ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

 இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்து திரைக்கு வர உள்ள நிலையில் உள்ளது.

 இதனை அடுத்து அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தை நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற வேளையில் படத்திற்கான இசையை அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.

இதன்படி வரும் ஜனவரி மாதம் முதல் இந்த படத்திற்கான ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக இந்த படத்திற்கு ஏகே 62 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இந்த படத்திற்கான ஓடிடி உரிமை விற்பனையாகி விட்டதாக தகவல்கள் பரபரப்பாக வெளிவந்துள்ளது. இந்தப் படத்திற்கான உரிமையை நெட் பிளக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 ஏற்கனவே தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கான ஓடிடி உரிமையை நெட் பிளக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய உள்ள நிலையில் மேலும் நடிக்காத, சூட்டிங் நடக்காத இந்த படத்தின் உரிமையையும் எந்த நிறுவனம் கைப்பற்றி இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதனை அடுத்து எந்த படத்திற்கான அப்டேட்டுகள் இனி விரைவில் வந்து சேரும் என தெரியவந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட தலை ரசிகர்கள் தற்போது மிகுந்த குஷியில் இருப்பதாக தெரிகிறது இரண்டு படங்களும் அவருக்கு மாஸ் வெற்றியையும் வரலாறு காணாத வசூலையும் தர வேண்டும் என்று அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …