ஆரம்ப நாட்களில் தன் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த அஜித்..!

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோக்களின் வரிசையில் இருக்கும் அஜித் குமார் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த புதுமுக அறிமுகத்திற்கான விருது கிடைத்தது.

தல அஜித்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவர் நினைத்த அளவு வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை.

எனினும் அதே ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் நடித்த போதும் இவருக்கு சொல்லிக் கொள்ளக்கூடிய அளவு ரசிகர்களின் மத்தியில் ரீச் கிடைக்கவில்லை. 

மேலும் தனது முயற்சியை கைவிடாத அஜீத் 1995-ஆம் ஆண்டு நடித்த ஆசை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மோட்டர் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயம் அடைந்ததை அடுத்து திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அஜித்தின் உடல்நிலை தேறிய பிறகு 1998-ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளி வந்த காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கிரீடம், பில்லா, அசத்தல், மங்காத்தா பில்லா 2 போன்ற படங்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்தை கொடுத்து உயர்த்தியது.

அஜித் மீது ஆரம்ப நாட்களில் குவிந்த குற்றச்சாட்டுகள்..

மேலும் தல அஜித் இடையில் பல சருக்கல்களையும் தோல்வி படங்களையும் அடுக்கடுக்காக தந்திருக்கிறார். இதனை அடுத்து இவரது படங்கள் தோல்வியடைய காரணமாக இருந்தது இவர் கதை கேட்காமலேயே படத்தில் நடிப்பது தான் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வெகுவாக எழுந்தது.

அந்த வகையில் இவர் சினேகாவோடு இணைந்து நடித்த ஜனா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை இவருக்கு பெற்று தந்தது. மேலும் 2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளி வந்த ஜி என்ற திரைப்படமும் இவருக்கு தோல்வியை கொடுத்தது.

மேலும் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளி வந்த ஆஞ்சநேயா படமும் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த தோல்விக்கான காரணம் கதை கேட்காமல் நடித்தது தான் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்பள்ளி வைக்கக்கூடிய வகையில் தல அஜித் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அவர் சொன்ன வார்த்தையில் கண்டிப்பாக உண்மை உள்ளது என்பதை பலரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அப்படி என்ன பதிலை அவர் அளித்து அனைவரது வாயையும் அடைத்து இருக்கிறார் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதை பற்றி இந்த பதிவில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரே பதிலில் வாய் அடைக்க வைத்த அஜித்..

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த அஜித்திடம் அதற்கான காரணம் நீங்கள் கதை கேட்காமல் நடித்தது தானே என்று கேட்டதற்கு அவர் சற்றும் தயங்காமல் நான் ஒரு நடிகன் மட்டுமே இயக்குனர் கிடையாது. இயக்குனர் செய்ய வேண்டிய வேலையை நான் எப்படி செய்ய முடியும்? என்று கேட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு படத்தில் ஒரு கதை ஒர்க்கவுட் ஆவது இயக்குனர் கையிலும் அதை தயாரிக்கின்ற தயாரிப்பாளர் கையிலும் இருக்கும் போது படம் வெற்றியடைந்தால் இயக்குனர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய நீங்கள் படம் தோல்வி அடைந்தால் அதற்கு ஹீரோக்களின் காரணம் என்று நினைத்துக் கூறிய போக்கு தவறானது என்பதை உணர்த்தி இருக்கிறார்.

இவர் கூறிய இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சில தோல்வி படங்களுக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மங்காத்தா திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படத்திலும் மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்திலும் நடித்து பெரிய வெற்றியை பெற்றார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version