ஷாலினிக்கு உடலில் ஒரு பாகத்தை எடுத்தாச்சு.. கவலையில் அஜித்.. பிரபலம் வெளியிட்ட ரகசியம்…!

தமிழில் அதிக ரசிகர்களைக் கொண்ட டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். ஆரம்ப கட்டத்தில் விஜய்,அஜித், சூர்யா என மூன்று பேரும் நடிகர்களுக்குள்ளான போட்டியில் இருந்து வந்தனர். ஆனால் 2000க்கு பிறகு சூர்யாவின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து சூர்யா இந்த போட்டியில் பின்னடைவை அடைந்தார் ஆனால் விஜய்க்கும் அஜித்துக்குமான போட்டி மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதே சமயம் விஜய்யும் அஜித்தும் நிறைய தோல்வி படங்களையும் கொடுத்திருக்கின்றனர்.

அஜித்திற்கு இருக்கும் கூட்டம்:

ஆனாலும் அவர்களுக்கான ரசிக்கப்பட்டாளம் என்பது குறையவே இல்லை. முக்கியமாக அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகப்பட்டாளம் இருந்து வருகிறது ஏனெனில் சினிமா என்பதையும் தாண்டி மற்ற துறைகளிலும் திறமை வாய்ந்த ஆளாக அஜித் இருந்து வருகிறார்.

முக்கியமாக பைக் ரேஸ் மாதிரியான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதனால் தொடர்ந்து அஜித்துக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல அஜித்தும் மங்காத்தா வலிமை, விவேகம் மாதிரியான திரைப்படங்களில் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சினிமாவில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரோ அதே அளவிற்கு தன்னுடைய குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். ஒவ்வொரு முறை வெளிநாட்டிற்கு அஜித் செல்லும் போதும் தன்னுடைய  குடும்பத்தாருக்கு பரிசுகளை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

குடும்பம் மீது பாசம்:

இதனாலேயே அவரது குழந்தைகள் மனைவி எல்லோருமே அஜித்தின் வருகைக்காக காத்திருப்பதுண்டு என கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தின் மனைவியான ஷாலினிக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த சமயத்தில் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். விடாமுயற்சி படத்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது. அவற்றை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்பதால் வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அஜித்.

இருந்தும் கூட தன்னுடைய மனைவியின் ஆபரேஷன் தினத்தன்று தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். வந்து இருந்து தன்னுடைய மனைவியை பார்த்துவிட்டு பிறகுதான் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார். அதாவது ஷாலினிக்கு என்ன அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறித்து விரிவான தகவல்கள் எதுவும் இல்லை.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சபிதா ஜோசப் கூறும் பொழுது அவரது உடல் பாகம் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டது என்று கூறுகிறார். அது கொஞ்சம் பெரிய ஆபரேஷன்தான் என்றாலும் கூட எந்த வித உயிருக்கு ஆபத்தும் ஏற்படாத வகையில் அந்த ஆபரேஷன் நடக்க வேண்டும் என்று அஜித் கூறியிருந்தார்.

அந்த வகையில்தான் அந்த ஆபரேஷன் நடந்தது அதன் பிறகு ஷாலினி உடல் சரியான பிறகுதான் அஜித் திரும்ப படப்பிடிப்புக்கு சென்றார் என்று கூறுகிறார் சபிதா ஜோசப்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version