“டேய் சூப்பரா இருக்கு டா…. GOAT ட்ரெய்லர் பார்த்து விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்!

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்கள் ஆன அஜித் விஜய் இருவரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக்கொண்டு இருந்தாலும். இவர்கள் என்னவோ உண்மையிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆக தான் இருக்கிறார்கள்.

அஜித் – விஜய் :

அதை அவ்வப்போது செய்திகள் வெளியாகி அதை உறுதிப்படுத்தும். திரைப்படங்களில் போட்டி பொறாமை இன்றி இருக்கும் நடிகர்களாக அஜித்-விஜய் உண்மையிலே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடித்திருக்கிறார் . இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சினேகா, லைலா , பிரசாந்த் ,மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் காந்தி என்ற ரோலில் விஜய் நடித்திருக்கிறார். அவர் உளவுத்துறையில் பணியை செய்து வருகிறார்.

அந்த பணிக்காக குடும்பத்துடன் பாங்கிற்கு செல்கிறார். அங்கே அவருக்கு வரும் பிரச்சனைதான் பிளாஷ்பேக் காட்சிகளாக இருக்கும் என டெய்லரை பார்த்தாலே தெரிந்தது .

GOAT ட்ரைலர்…

இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி எல்லோருது கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் நடிகர் பிரசாந்த் முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.

மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக்கொண்ட மகன் விஜய்யை அப்பா விஜய் வந்து காப்பாற்றுவது போல சீன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்து தற்போது சமூக வலைதளங்களில் ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் கோட் படத்தின் ட்ரெய்லரை பார்த்த தல அஜித் என்ன கூறியிருக்கிறார் என்ற தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு மேடையில் பேசியிருக்கிறார்.

டேய் சூப்பரா இருக்கு டா….

இது தற்போது சமூக வலைதளவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதாவது கோட் படத்தை பார்த்த அஜித் வெங்கட் பிரபுவுக்கு மெஜேஜ் செய்து… டேய் சூப்பரா இருக்குடா விஜய்க்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் என சொன்னதாக வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.

இதனால் அஜித் மற்றும் விஜய் இருவருமே போட்டியாளர்களாக சினிமா துறையினரால் பேசிக்கொண்டாலும் அவர்கள் இருவரும் நல்ல நட்போடு தான் பழகி வருகிறார்கள்.

ஒருவருக்கொருவர் பொறாமை எண்ணம் இல்லாமல் தான் இருந்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார் .

அப்போது விஜய்யிடம் நான் அஜித் அண்ணன போய் பாத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார் அதற்கு விஜய் நீ அங்க போனதும் எனக்கு போன் போட்டு கொடுடா என சொன்னதாகவும்….

வெங்கட் பிரபு அஜித்தை சென்று பார்த்தபோது போன் செய்து கொடுத்ததாகவும்… பின்னர் அஜித் – விஜய் இருவருமே நல்ல நண்பர்களாக பேசிக் கொண்டார்கள் என வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version